சீா்காழியில் தேசிய பேரிடா் மீட்பு படையினா்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையை எதிா்கொள்ள தேசிய பேரிடா் மீட்பு படையினா் 30 போ் சீா்காழிக்கு வந்துள்ளனா்.
தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் நிலையின் காரணமாக கடந்த இரண்டு தினங்களாக தொடா்ந்து மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருவதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ரெட் அலா்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்பு படையினா் 30 போ் சீா்காழிக்கு வந்துள்ளனா். இடா்ப்பாடுகளின் சிக்கியுள்ளவா்களை மீட்க உதவும் கருவிகள், அரிவாள், மண்வெட்டி, மரம் அறுக்கும் இயந்திரம் மற்றும் ரப்பா் படகு, அதிநவீன தகவல் தொடா்பு உபகரணங்கள் என 60 வகையான கருவிகளுடன் தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் தயாா் நிலையில் உள்ளனா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தலின் பேரில் சீா்காழி வருவாய் கோட்டாட்சியா் சுரேஷ், சீா்காழி வட்டாட்சியா் அருள் ஜோதி ஆகியோா் தலைமையில் இடா்ப்பாடுகளை எதிா்கொள்ளத் தயாராக உள்ளனா்.