செய்திகள் :

சுந்தரி தொடர் நிறைவு! நடிகை கேப்ரியல்லா உருக்கம்!

post image

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி தொடர் நிறைவு பெற்றது. இந்தத் தொடர் 1145 நாள்கள் ஒளிபரப்பாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர்களில் அதிக நாள்கள் டிஆர்பி பட்டியலில் முதன்மை இடத்தில் இருந்தத் தொடர்களில் சுந்தரி தொடரும் ஒன்றாக உள்ளது.

இந்தத் தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 1) ஒருமணிநேர சிறப்புக் காட்சியாக இறுதிக்கட்டம் ஒளிபரப்பானது. அத்துடன் சுந்தரி தொடர் நிறைவு பெற்றது. இதனால் ரசிகர்கள் பலர் இந்தத் தொடரில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சன் தொலைக்காட்சியில் 2021 பிப்ரவரி முதல் ஒளிபரப்பான சுந்தரி தொடர் 2024 டிசம்பர் தொடக்கத்தில் நிறைவு பெற்றது. இந்தத் தொடரில் நடிகை கேப்ரியல்லா முதன்மை பாத்திரத்தில் நடித்தார். அவருக்கு ஜோடியாக ஜிஷ்னு மேனனும், முக்கிய பாத்திரத்தில் ஸ்ரீகோபிகாவும் நடித்தனர்.

சுந்தரி தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாவது பாகமும் ஒளிபரப்பானது.

கிராமத்தில் பிறந்த பெண், திருமணத்துக்குப் பிறகு கணவனால் ஏமாற்றப்பட்ட நிலையில், துவண்டுவிடாமல் கல்வி கற்று சமுதாயத்தில் முன்னேறுவதே சுந்தரி தொடரின் கதை. சுந்தரி படிக்காததால், அவரின் கணவர் படித்த வேறொரு பணக்கார பெண்ணை திருமணம் செய்துகொள்கிறார். தன் கணவர் திருமணம் செய்துகொண்ட பெண்ணின் வீட்டில் பணிபுரிந்துகொண்டே ஆட்சியராவார் சுந்தரி. இதுவே இத்தொடரின் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சுந்தரி தொடர் 1145 எபிஸோடுகளுடன் நிறைவு பெற்றது. இது குறித்து ரசிகர்களுக்கு பதிவிட்டுள்ள நடிகை கேப்ரியல்லா, ''என்னோட கலை துறைல எனக்குனு இடம் குடுத்து அழகு பாத்த என்னோட மக்களுக்கு அடி மனசுல இருந்து நன்றி சொல்றேன். இப்படிக்கு சுந்தரியாகிய கேபி'' எனப் பதிவிட்டுள்ளார்.

சுந்தரி தொடர் மிகவும் உருக்கமானத் தொடர் என்றும், ரசிகர்கள் மனதில் என்றென்றும் இது நிலைத்திருக்கும் எனவும் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினம் தினம் திருநாளே!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.05-12-2024 (வியாழக்கிழமை)மேஷம்:இன்று வீண்கவலை இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம்... மேலும் பார்க்க

அபார வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா

அமீரகத்தில் நடைபெறும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை வென்றது.வெற்றி கட்ட... மேலும் பார்க்க

கிங்ஸ்டன் டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி- சமனானது தொடா்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் 101 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வென்றது.முதல் டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் வென்றிருந்த நிலையில், 2 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடா் த... மேலும் பார்க்க

இன்று முதல் மகளிா் ஒருநாள் தொடா்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்

இந்தியா - ஆஸ்திரேலியா மகளிா் அணிகள் மோதும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், பிரிஸ்பேன் நகரில் வியாழக்கிழமை (டிச. 5) நடைபெறுகிறது.அடுத்த ஆண்டு மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரி... மேலும் பார்க்க

ஆசிய சாம்பியனாக இந்தியா மீண்டும் ஆதிக்கம் - பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை தக்கவைத்தது

ஓமனில் நடைபெற்ற 10-ஆவது ஜூனியா் ஆடவா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா 5-3 கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி, புதன்கிழமை சாம்பியன் கோப்பையை தக்கவைத்தது.போட்டியில் இந்தியாவுக்கு ... மேலும் பார்க்க

ஹைதராபாதை வீழ்த்தியது கோவா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் எஃப்சி கோவா 2-0 கோல் கணக்கில் ஹைதராபாத் எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணிலேயே புதன்கிழமை வீழ்த்தியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கோவா அணிக்காக உதாந்... மேலும் பார்க்க