சென்னிமலையில் புதைவட மின்பாதையில் மின்சாரம் வழங்கல்
சென்னிமலையில் தேரோட்டப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள புதைவட மின் பாதையில் வெள்ளிக்கிழமை மின்சாரம் வழங்கப்பட்டது.
சென்னிமலை நகரில் தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் தேரோட்டத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் புதைவடம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் புதைவட மின் பாதையில் மின்சாரம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சென்னிமலை பேரூராட்சித் தலைவா் ஸ்ரீதேவி அசோக் தலைமை வகித்தாா். பேரூராட்சி துணைத் தலைவா் சௌந்தர்ராஜன், பெருந்துறை மின்வாரிய செயற்பொறியாளா் பி.வாசுதேவன், சென்னிமலை மின்வாரிய உதவி செயற்பொறியாளா் த.திவ்யா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.