செய்திகள் :

சென்னையில் தொடங்கியது மழை.. எப்படி இருக்கும்? பிரதீப் ஜான் பதில்

post image

சென்னையில் கடந்த ஒரு சில நாள்களாகவே பலத்த மழை பகலிலும், இரவிலும் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அதுபோன்று இப்போது தொடங்கிய மழை இருக்காது என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் அதன் சுற்றவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் மெல்ல மழைத் தொடங்கி பரவலாக பெய்துள்ளது. ஆனால், அந்த மழைப் போல இல்லாமல், இன்று மாலை தொடங்கியிருக்கும் மழை சற்று நேரத்தில் விட்டுவிடும் என்று தெரிவித்துள்ளார்.

சென்னை தயாரா என்று கேள்வியோடு தமிழ்நாடு வெதர்மேன் என அறியப்படும் மழை நிலவரத்தை முன்கூட்டியே கணித்துக் கூறி வரும் பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சென்னை தயாரா?

இடியுடன் மழைக்கு மேகக் கூட்டங்கள் சென்னையை நெருங்கி விட்டன. வழக்கமாக, சென்னைக்கான மழை அறிகுறி முதலில் தென்படுவது ஆவடியில்தான்.

அடுத்து அம்பத்தூர். இதனைத் தொடர்ந்துதான், சென்னை நகரின் பிற பகுதிகளுக்கு மழை தொடங்கும்.

கடந்த இரண்டு நாள்களைப் போல அல்லாமல், இன்று பெய்யும் மழை பலத்த மழையாக இருக்காது. நகரின் சில பகுதிகளில் மழை இல்லாமலும் இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

ரோபோ சங்கர் உடல் தகனம்! அரசியல், திரைப் பிரபலங்கள் இறுதி அஞ்சலி!

நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல், வளசரவாக்கத்தில் உள்ள மின் மயான... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமியின் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயண தேதி மாற்றம்

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியின் மக்களைக் காப்போம் நாமக்கல் மாவட்ட சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், அதிமுக பொதுச்செயலர், சட்... மேலும் பார்க்க

காஸா இனப்படுகொலைக்கு எதிராக சென்னையில் போராட்டம்!

இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் மக்கள் கொல்லப்படுவதற்கு எதிராக சென்னையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் த... மேலும் பார்க்க

விஜய் நாளை மீண்டும் பிரசாரம்- தொண்டர்களுக்கு தவெக முக்கிய அறிவுறுத்தல்

நாகப்பட்டினத்தில் தவெக தலைவர் விஜய் நாளை மீண்டும் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் தொண்டர்களுக்கு கட்சித் தலைமை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், நம் வெற்றித் தலைவர் விஜய், தமிழகம் முழுவது... மேலும் பார்க்க

விஜய்யின் ஜனநாயகன் அப்டேட்! ரசிகர்களுக்கு விருந்து!

நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படம், ரசிகர்களுக்கு பெரிதும் விருந்தளிக்கும் என்று இயக்குநர் எச்.வினோத் தெரிவித்துள்ளார்.நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடித்துவரும் ஜனநாயகன், அவரின் கடைசிப் படம் என்பதால், ரச... மேலும் பார்க்க

வேலூர் காவலர் பயிற்சிப் பள்ளிக்கு வேலுநாச்சியாரின் பெயர்! - முதல்வர் அறிவிப்பு

வேலூரில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளிக்கு வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ... மேலும் பார்க்க