செய்திகள் :

சென்னையில் நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற திட்டம்? ஏன்?

post image

சென்னையில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தீர்வுகளை போக்குவரத்துக் காவல்துறையினர் ஆராய்ந்து, அதனை சோதனை முறையில் செயல்படுத்தி, வெற்றி பெற்றால் செயல்படுத்தியும் வருகிறார்கள்.

அதன் முன்னோடியாக, சென்னையை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகே இருக்கும் சிக்னலில் பல மணி நேரம் வாகனங்கள் காத்திருக்கும் நிலை இருந்தது. இதனால் வாகன ஓட்டிகளை விடவும், சாலையில் நடந்து செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டை சிக்னல் இருந்த இடம் மூடப்பட்டு, பாடி நோக்கி செல்லும் வாகனங்களுடனே ஆவின் செல்ல வேண்டிய வாகனங்களும் சென்று, ஓரிடத்தில் யு டர்ன் செய்து வரும் வகையிலும், அம்பத்தூர் நோக்கி செல்லும் வாகனங்களுடனே சென்று தொழிற்பேட்டைக்குள் நுழைய வேண்டிய வாகனங்களும் சென்று சற்று தொலைவில் இருக்கும் யு டர்ன் வழியில் திரும்பி வரும் வகையில் மாற்றப்பட்டு, தற்போது ஓரளவுக்கு போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை மாநகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாக இருக்கும் பேருந்து நிறுத்தங்களை மாற்றுவதற்கான வழிகள் ஆராயப்பட்டு வருவதாக மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

சிக்னல், மேம்பாலங்கள் அருகேயுள்ள பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தொலைவுக்கு தள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்றுவது குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகம் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியிருக்கிறது.

இதன் மூலம், பல முக்கிய சாலைகளில், மாநகரப் பேருந்துகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைந்து, போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சென்னையில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பேருந்து நிறுத்தங்கள் இடம் மாற்றப்படவில்லை என்றும், சீரான இடைவெளியில், போக்குவரத்தை எளிதாக்க, பேருந்து நிறுத்தங்கள் மாற்றப்பட வேண்டும் என்று அதிகாரிகள் கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஆய்வுப் பணிகளை முடித்து, பரிசீலனை செய்து, நூற்றுக்கணக்கான பேருந்து நிறுத்தங்கள் மாற்றப்படும் என்றும், சென்னை மாநகராட்சி மூலமாகவே, பேருந்து நிறுத்தங்களை இடம் மாற்ற முடியும் என்றும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், விரைவில், பேருந்து நிறுத்தங்கள் இடம் மாற்றப்படும் என்றும், இது பேருந்துப் பயணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தாத வகையில் இருக்க வேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

முதற்கட்டமாக பாரிமுனை - முகப்பேர், வடபழனி - தரமணி இடையேயான வழித்தடங்களில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் ஆய்வு செய்யப்படும் என்றம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில், செங்கோட்டை எக்ஸ்பிரஸ் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் - தெற்கு ரயில்வே

சென்னை எழும்பூரிலிருந்து செல்லும் முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே திங்கள்கிழமை(நவ. 18) வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

சூடுபிடிக்கும் பிக் பாஸ்: செளந்தர்யாவைக் கண்டு அச்சப்படும் முத்துக்குமரன்!

நடிகை செளந்தர்யாவைக் கண்டு முத்துக்குமரன் அஞ்சுவதைப் போன்று பேசுகிறார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் முத்துக்குமரன் மிகுந்த பலமான போட்டி... மேலும் பார்க்க

தண்டனையா? கழிப்பறைக்காக பல மணி நேரம் காத்திருக்கும் வேலூர் சிறைக் கைதிகள்!

வேலூர் மத்திய சிறையில், ஆண்களுக்கான பிரிவில் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக் கைதிகளுக்கு, சிறைவாழ்வை விட, கழிப்பறைக்காக பல மணி நேரம் காத்திருப்பதுதான் கொடுந்துயரமாக மாறியிருக்கிறது.கழிப்பறையைப் பயன்படுத்... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் டிக்கெட் முன்பதிவு கால வரம்பு 90 நாட்களாக உயர்வு- இன்று முதல் அமல்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இன்று முதல் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு போக்குவரத்துக் கழக கூறியிருப்பதாவது, பயணிகளி... மேலும் பார்க்க

10 மாவட்டங்களில் இன்று கனமழை!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல ... மேலும் பார்க்க

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: கடிநெல்வயல் ஊராட்சி மக்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம் நகராட்சியுடன் கடிநெல்வயல் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பிரதான சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சி அமைப்பை விரிவுபடுத்... மேலும் பார்க்க