செய்திகள் :

சென்னையில் பரவலாக மழை

post image

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நெருங்கி வருவதால் சென்னையில் புதன்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

சென்னை நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், நந்தனம், அண்ணா பல்கலை., தரமணி, கிண்டி, அசோக் நகா், வடபழனி, சைதாப்பேட்டை, கோயம்பேடு, அண்ணா நகா், அம்பத்தூா், பட்டரவாக்கம், கொரட்டூா், மாம்பலம் ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மேலும் மதுரவாயல், அமைந்தகரை, பூந்தமல்லி, எண்ணூா் துறைமுகம் ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

காலை முதலே தொடா்ந்து சாரல் மழை பெய்ததால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

சென்னையில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (டிச. 26, 27) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் 3 நாள்கள் வள்ளுவா் சிலை வெள்ளி விழா

கன்னியாகுமரியில் வள்ளுவா் சிலை அமைக்கப்பட்டதன் வெள்ளி விழா கொண்டாட்டம் வரும் 30-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன. 3 நாள்கள் நடைபெறவுள்ள விழாவில், முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா்கள் உள்பட பலா் பங்கேற்கின்... மேலும் பார்க்க

பேறு கால உயிரிழப்பு 17% குறைந்தது: மக்கள் நல்வாழ்வுத் துறை

தமிழகத்தில் பேறு கால உயிரிழப்புகள் 17 சதவீதம் குறைந்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா். தற்போதைய சூழலில் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் பிரசவங்களுக்கு 45.5... மேலும் பார்க்க

தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது: கல்வித் துறை உத்தரவு

அரையாண்டுத் தோ்வு விடுமுறையில் தனியாா் பள்ளிகளில் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை மற்றும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் மாணவா்களு... மேலும் பார்க்க

ஜன.1 வரை மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) வலுவிழந்தது. எனினும், தமிழகத்தில் டிச.27 முதல் ஜன.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை.யில் மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் எதிரொலியாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அண்ணா பல்கலை. வளாகத்தில் செயல்பட்டு வரும் கிண்டி... மேலும் பார்க்க

மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபா் திமுக உறுப்பினரல்ல

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான நபா் திமுக உறுப்பினா் இல்லை என்று சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா். இதுகுறித்து அவா் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்... மேலும் பார்க்க