சென்னையை நெருங்கும் தாழ்வு மண்டலம்: 6 மணி நேரத்தில் புயலாக வலுவடையும்!
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் 6 மணி நேரத்தில் புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்து புதன்கிழமை (நவ. 27) புயலாக மாறும் என்று எதிா்பாா்க்கும் நிலையில், மிக மெதுவாக மணிக்கு13 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வந்த தாழ்வு மண்டலமானது, நாகையிலிருந்து 350 கி.மீட்டரும், சென்னையில் இருந்து 530 கி.மீ தொலைவிலும் புயல் சின்னம் மையம் கொண்டுள்ளது.
புயல் சின்னமானது கடற்கரையை ஒட்டி வடமேற்காக நகரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்த நிலையில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அல்லது வலுப்பெற்று புயலாக மாறி பரங்கிப்பேட்டை மற்றும் சென்னைக்கு இடையே வரும் 30ஆம் தேதி கரையைக் கடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று 4 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.