செய்திகள் :

சென்னை மெட்ரோ ரயிலில் 10.52 கோடி பேர் பயணம்!

post image

2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 10.52 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்(CMRL) தெரிவித்துள்ளது.

சென்னை மெட்ரோ ரயிலில் ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை 35.53 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்

2024 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை மெட்ரோ ரயிலில் 10.52 கோடி பயணிகள் பயணம் செய்துள்ளனர்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதிலிருந்து பொதுமக்களுக்கும், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றுபவர்களுக்கும் நம்பகமான பாதுகாப்பான போக்குவரத்து வசதியை தொடர்ந்து செய்து வருகிறது.

​சென்னை மெட்ரோ ரயிலில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.20 லட்சம் பேர் பயணிக்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2024-ம் ஆண்டில் மட்டும் 10.52 கோடி பேர் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளார்கள். 2023-ம் ஆண்டை விட 2024-ம் ஆண்டில் 1.41 கோடி பேர் அதிகமாக பயணித்துள்ளார்கள் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: பொங்கலுக்கு வெளியாகும் 8 திரைப்படங்கள்!

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது;

2015 முதல் 2018 வரை 2,80,52,357 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்செய்துள்ளனர். அதேபோல், ​2019-ம் ஆண்டில் 3,28,13,628 கோடி பயணிகளும், 2020–ம்ஆண்டில் 1,18,56,982 கோடி பயணிகளும், 2021-ம் ஆண்டில் 2,53,03,383 கோடி பயணிகளும், 2022-ம் ஆண்டில் 6,09,8,7,765 கோடி பயணிகளும், 023-ம் ஆண்டில் 9,11,02,957 கோடி பயணிகளும் பயனித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டில் 10,52,43,721 கோடி பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளார்கள்.

​ஜூன் 29, 2015 முதல் டிசம்பர் 31, 2024 வரை மொத்தம் 35,53,60,793 பயணிகள் சென்னை மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு(OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App, PhonePe மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற அனைத்து வகையான பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவன் குரலில் வெளியான அகத்தியா பட பாடல்!

நடிகர்கள் ஜீவா, அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள அகத்தியா படத்தின் முதல் பாடல் யுவன் சங்கர் ராஜா குரலில் வெளியாகியுள்ளது.பாடலாசிரியர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா மற்றும் அர்ஜுன் பிரதான பாத்திரங... மேலும் பார்க்க

ஜி.வி. பிரகாஷ் குமாரின் கிங்ஸ்டன்: டீசர் எப்போது?

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகிவரும் கிங்ஸ்டன் படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் வெளியாகியுள்ளது.ஜி.வி.பிரகாஷ் குமாரின் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் ஜிவி -... மேலும் பார்க்க

அசாம்: 2023 ஆண்டு முதல் 21 தீவிரவாதிகள் கைது!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் 21 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சிறப்பு காவல் அதிரடிப்படை தெரிவித்துள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ... மேலும் பார்க்க

ரோஜா - 2 தொடரில் சுந்தரி சீரியல் நடிகர்!

ரோஜா - 2 தொடரில் சுந்தரி சீரியல் நடிகர் ஜிஷ்ணு மேனன் இணைந்துள்ளார்.சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர், கடந்த 2022 டிசம்பரில் நிறைவு பெற்றது.இத்தொடர... மேலும் பார்க்க

பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு!

இந்தூரில் பிச்சை எடுப்பவர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு என அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்ததற்கு பொது மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் பிச்... மேலும் பார்க்க

நாட்டில் 3 பேருக்கு ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று!

இந்தியாவில் ஹெச்எம்பிவி தீநுண்மியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது.சீனாவில் 2019-இல் பரவிய கரோனா தொற்று உலக நாடுகளை புரட்டிப் போட்டது. லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். ஐந்தாண்டுகளுக்... மேலும் பார்க்க