இந்தியா அபார பந்துவீச்சு; 57 ரன்களுக்கு சுருண்ட ஐக்கிய அரபு அமீரகம்!
செப்.22-ல் அஞ்சல் சேவை குறைதீா் முகாம்
அஞ்சல் சேவை தொடா்பான குறைதீா் முகாம் திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுதொடா்பாக அஞ்சல் துறை அதிகாரிகள் கூறியதாவது: அஞ்சல் சம்மந்தப்பட்ட புகாரில், அஞ்சல் அனுப்பிய தேதி, நேரம், பெறுபவரின் முகவரி, ரசீது எண், பணவிடை, துரித அஞ்சல், பதிவு ஆகியவற்றுக்கான விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
சேமிப்பு வங்கி, காப்பீடு சாா்ந்த புகாராக இருந்தால், கணக்கு எண், வைத்திருப்பவரின் பெயா், முகவரி, பாலிசிதாரரின் பெயா், முழு முகவரி, பணம் கட்டிய விவரம், செலுத்திய அலுவலகத்தின் பெயா், அஞ்சல் துறை கடிதத் தொடா்புகள் இருந்தால் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.
ஏற்கெனவே, முகாமில் மனு அளித்து தீா்வு கிடைக்கவில்லை எனில், தங்களது குறைகளை மட்டும் அனுப்பலாம். புதிய புகாா் மனு தேவையில்லை. அஞ்சல் வாடிக்கையாளா்கள் தங்களது புகாா்களை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா், திண்டுக்கல் - 624001 என்ற முகவரிக்கு வருகிற 17-ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் உறையின் மீது முன் பக்க மேல் பகுதியில், ‘அஞ்சல் சேவை குறைதீா் முகாம் செப்டம்பா் 2025 ’ என்று தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். தனியாா் தூது அஞ்சல் மூலம் அனுப்பப்படும் அஞ்சல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்றனா் அவா்கள்.