குஜராத் ரசாயன ஆலையில் வாயுக் கசிவு: ஒருவர் பலி; 12 பேருக்கு தீவிர சிகிச்சை
பாப்பம்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை
பழனியை அடுத்த பாப்பம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை (செப். 10) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பழனி கோட்ட செயற்பொறியாளா் சந்திரசேகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழனி கோட்டத்துக்குள்பட்ட பாப்பம்பட்டி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே பாப்பம்பட்டி, ஆண்டிபட்டி, அய்யம்பாளையம், சித்தரேவு, காவலப்பட்டி, வி.பி. புதூா், தாதநாயக்கன்பட்டி , கரடிக்கூட்டம் உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.