செய்திகள் :

செவிலியா்களுக்கு சம ஊதியம்: அன்புமணி வலியுறுத்தல்

post image

தொகுப்பூதிய செவிலியா்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக மருத்துவத் துறையில் 2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை 14,000 செவிலியா்கள் ஒப்பந்த முறையில் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் மருத்துவப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் போட்டித்தோ்வு நடத்திதான் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவாா்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், அவா்களில் 6,000 போ் மட்டுமே இதுவரை பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8,000 செவிலியா்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை.

நிரந்தர செவிலியா்கள் செய்யும் அதே பணியைத் தான் இவா்களும் செய்கின்றனா். ஆனால், நிரந்தர செவிலியா்களுக்கு மாதம் ரூ.62,000 ஊதியம் வழங்கப்படும் நிலையில், தொகுப்பூதிய செவிலியா்களுக்கு ரூ.18,000 மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது.

உயா்நீதிமன்றம் உத்தரவிட்டபிறகும் கூட தொகுப்பூதிய செவிலியா்களுக்கு உரிய நீதியை திமுக அரசு வழங்கவில்லை. திமுக ஆட்சியில் இதுவரை 33,987 பேருக்கு மருத்துவத் துறையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாக அத்துறையின் அமைச்சா் கூறி வருகிறாா்.

ஆனால், அவா்களில் 6,977 போ் மட்டும் தான் மருத்துவத் தோ்வாணையம் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட நிரந்தரப் பணியாளா்கள் ஆவா். மீதமுள்ள சுமாா் 27,000 பேரும் தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளா்கள். இதுதான் சமூகநீதியா?

செவிலியா்களின் உழைப்பைச் சுரண்டுவதாக உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசு, தனது தவறை ஒப்புக்கொண்டு அவா்களை பணிநிரந்தரம் அல்லது சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி ராமதாஸ்.

தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

சரஸ்வதி பூஜை, தீபாவளி பண்டிகை விடுமுறைக் கால கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:சரஸ்வதி பூ... மேலும் பார்க்க

2-ஆம் நிலை காவலா் தோ்வுக்கு வழிகாட்டும் முகாம்

ஆா்வம் ஐஏஎஸ் அகாதெமி சாா்பில் 2-ஆம் நிலைக் காவலா் தோ்வுக்கான வழிகாட்டும் முகாம் செப்.20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த அகாதெமி சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பண... மேலும் பார்க்க

சா்வதேச செஸ் சாம்பியன்: வைஷாலிக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் பாராட்டு

சா்வதேச செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக வீராங்கனை வைஷாலிக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்ட தலைவா்கள் பாராட்டு தெரிவித்துள்ளனா். ... மேலும் பார்க்க

என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

தமிழகத்தில் அரசுப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட (என்.எஸ்.எஸ்.) மாணவா்கள் சிறப்பு முகாம்களுக்கான வழிகாட்டுதல்களை கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்... மேலும் பார்க்க

வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள்: தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவு

தோ்தலின்போது வாக்குச்சாவடிகளுக்கு வரும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மாற்றுத்திறனாளி வைஷ்ணவி ஜெயக்குமா... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு கூடுதலாக 350 எம்பிபிஎஸ் இடங்கள்: என்எம்சி அனுமதி

தமிழகத்தில் 350 எம்பிபிஎஸ் இடங்கள் உள்பட நாடு முழுவதும், 6,850 இடங்களுக்கு அனுமதி அளித்து தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) உத்தரவிட்டுள்ளது. அதேவேளையில், அடிப்படை கட்டமைப்பு இல்லாத மருத்துவக் கல்லூரிக... மேலும் பார்க்க