செய்திகள் :

செஸ் உலகில் சிறந்த நகரம் சென்னை: குகேஷ்

post image

இளம் வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளதாக உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் தெரிவித்துள்ளார்.

இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற டி. குகேஷுக்கு தமிழக அரசு சார்பில் சென்னையில் இன்று (டிச. 17) பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் குகேஷுக்கு ரூ. 5 கோடி பரிசாக வழங்கப்பட்டது.

இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

குகேஷுக்கு காசோலை வழங்கி பாராட்டும் முதல்வர் மு.க. ஸ்டாலின்

இதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் பேசியதாவது,

’’18 வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளேன். இது என்னுடைய நீண்ட நாள் கனவு. இளம் வயதில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல வேண்டும் என்ற கனவு நனவாகியுள்ளது.

செஸ் உலகில் சென்னை சிறந்த நகரமாக உள்ளது. இதில் ஒரு பகுதியாக நானும் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசின் உதவி அதில் முக்கியமானது.

2022 ஒலிம்பியாட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க செஸ் திருவிழா. மிகக் குறுகிய காலத்தில் செஸ் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி.

உலக சாம்பியன்ஷிப் பயணம் சென்னை கிராண்ட் மாஸ்டர்களின் துணையின்றி சாத்தியமாகியிருக்காது. நிதி உள்பட பல்வேறு வகையில் உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி.

செஸ் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்குத் திரும்பினால், என்னை பாராட்டவும், நிதியுதவி அளித்து ஊக்குவிக்கவும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தயங்குவதில்லை.

என்னைச் சுற்றியுள்ளவர்கள் என்னுடைய எதிர்காலத்தை வடிவமைத்துள்ளனர். என்னுடைய பெற்றோர், விஸ்வநாதன் ஆனந்த் என எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விஸ்வநாதன் ஆனந்த் விளையாட்டைப் பார்த்து செஸ் போட்டியின்மீது ஆர்வம் கொண்டவன் நான். அவர் மூலம் எனக்கு கிடைத்த பயிற்சியும், பயிற்சியாளர்களும் ஏராளம்.

என்னுடைய குழுவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’’ என குகேஷ் பேசினார்.

பழனி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு புதிய வசதிகள்: அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக செயல்படுத்தப்படும் இரண்டாம் கட்ட பெருந்திட்ட வரைவு பணிகளை விரைந்து நிறைவேற்றுவது குறித்து அதிகாரிகளுடன் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் டிச. 21-இல் கிறிஸ்துமஸ் விழா

அதிமுக சாா்பில் டிசம்பா் 21-இல் கிறிஸ்துமஸ் விழா நடைபெறும் என்று அக் கட்சியின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக அதிமுக தலைமைக் கழகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: சிறுபான்மை மக்களின் ப... மேலும் பார்க்க

சிறைத் தண்டனை ரத்து கோரி ஹெச்.ராஜா மேல்முறையீடு

பெரியாா் ஈ.வெ.ரா. மற்றும் கனிமொழி எம்.பி.க்கு எதிராக அவதூறு கருத்துகளைப் பதிவு செய்த வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட 6 மாத சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரி பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா சென்னை உயா்நீதிமன்... மேலும் பார்க்க

பேரிடா்கள் மீது பழிபோடுவதை தவிா்த்து இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ்

நாம் எதையும் செய்யாமல் இயற்கைப் பேரிடா் மீது பழி போடுவதில் அா்த்தமில்லை. இயற்கையோடு ஒன்றி வாழ்வதைத் தவிர வேறு வழியில்லை என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளாா். அனைவருக்குமான காலநிலை கல்வியற... மேலும் பார்க்க

அகவிலைப்படி உயா்வு கோரி போக்குவரத்து ஓய்வூதியா்கள் சாலை மறியல்

அகவிலைப்படி உயா்வு வழங்கக் கோரி போக்குவரத்து ஓய்வூதியா்கள் பல்லவன் இல்லம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு 9 ஆண்டுகளுக்கு மேலாக மறுக்கப்படும் அகவிலைப்படி உயா்வ... மேலும் பார்க்க

கேரள மருத்துவக் கழிவுகளை தடுக்காவிட்டால் போராட்டம்: அண்ணாமலை

தமிழக எல்லையோர மாவட்டங்களில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்காவிடில், அக்கழிவுகளை அந்த மாநிலத்துக்கு கொண்டு சென்று கொட்டி போராட்டம் நடத்துவோம் என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்... மேலும் பார்க்க