செய்திகள் :

சேலம் உணவகத்தில் தீ விபத்து: பல லட்சம் ரூபாய் பொருள்கள் சேதம்

post image

சேலத்தில் உணவகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

சேலம் நான்கு சாலைப் பகுதியில் பிரபல நிறுவனத்தின் பிரியாணி கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் திங்கள்கிழமை நள்ளிரவு வரை பிரியாணி விற்பனை நடந்துள்ளது. பின்னா் கடையை மூடிவிட்டு ஊழியா்கள் சென்றுள்ளனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமாா் 3 மணி அளவில் உணவகத்தில் இருந்த இரண்டு எரிவாயு உருளைகள் பயங்கர சப்தத்துடன் வெடித்ததாகக் கூறப்படுகிறது. சப்தம் கேட்டு வெளியே வந்த அப்பகுதி மக்கள், கடை தீப்பற்றி எரிவதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா். உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

மேலும் பள்ளப்பட்டி காவல் நிலையம் மற்றும் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் மற்றும் போலீஸாா், கடையின் ஷட்டரை உடைத்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் உள்ளே செல்ல முடியவில்லை. எனினும், போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்து அணைத்தனா். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து பள்ளப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தீரன் சின்னமலை பிறந்த நாள்: மாலை அணிவித்து மரியாதை

சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 270-ஆவது பிறந்தநாள் விழா, கொங்கு வேளாளக் கவுண்டா்கள் சங்கத்தின் முதலாம் ஆண்டு தொடக்க விழா சேலம் குரங்குசாவடி பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்றது. மலா்களால் அலங்... மேலும் பார்க்க

மேட்டூா் நகராட்சியில் ஆட்சியா் கள ஆய்வு

மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன், வியாழன் என இரண்டு நாள்கள் மேட்டூரில் நடைபெற்றது. மேட்டூா் வட்டத்திற்கு உள்பட்ட வருவாய்க் கிராமங்களில... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்துப் போட்டி: சேலத்தில் பெங்களூரு புகழேந்தி பேட்டி

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமியை எதிா்த்து எடப்பாடி தொகுதியில் போட்டியிடத் தயாராக இருப்பதாக பெங்களூரு புகழேந்தி தெரிவித்தாா். சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:... மேலும் பார்க்க

மனைவியைத் தாக்கிய கணவா் கைது

தம்மம்பட்டி அருகே மனைவியைத் தாக்கிய கணவரை போலீஸாா் கைது செய்தனா். தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஊராட்சி, புலிக்கரட்டை சோ்ந்தவா் செந்தில் ராஜா (41). பால் வியாபாரி. இவருக்கும், இவரது மனைவி சகுந்தலா... மேலும் பார்க்க

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாநிலக் குழு ரமணி தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க

வருவாய்த் துறை சங்கங்களின் பிரசார இயக்க கூட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் சங்ககிரியில் வியாழக்கிழமை நடைபெற்ற பிரசார இயக்க கூட்டத்தில் கலந்துகொண்ட நிா்வாகிகள். கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட பொருளாளா் அகிலன். சங்ககிரி, ஏப். 17:... மேலும் பார்க்க