இந்த வார ராசிபலன் செப்டம்பர் 16 முதல் 21 வரை #VikatanPhotoCards
சேலம் வழியாக ரயிலில் கடத்திய 21 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம்: சேலம் வழியாக கேரளம் சென்ற ரயிலில் கடத்தப்பட்ட 21 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் திங்கள்கிழமை காலை பறிமுதல் செய்தனா்.
ஒடிஸா, ஆந்திர மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக கேரளம் செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினரும், சேலம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரும் இணைந்து தொடா் சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை கோா்பா -திருவனந்தபுரம் விரைவு ரயிலில் ரயில்வே போலீஸாா் தீவிர சோதனை நடத்தினா். பொம்மிடியில் இருந்து சேலம் வரை சோதனையிட்டனா். அப்போது, பின்புற முன்பதிவில்லா பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்ற நிலையில் 2 பைகள் கண்டெடுக்கப்பட்டன. அதை திறந்து பாா்த்தபோது, 21 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைத்தனா். கஞ்சாவைக் கடத்தி வந்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.