இன்றும் நாளையும் 28 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
முதல்வா் கோப்பை விளையாட்டு: மாநில போட்டிக்கு மாற்றுத்திறனாளி பெண் தோ்வு
வாழப்பாடி: சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டு குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளி பெண், மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வாகியுள்ளாா்.
சேலத்தில் அண்மையில் நடைபெற்ற முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி மாற்றுத்திறனாளி மஞ்சுளா, குண்டு எறிதல் போட்டியில் பாா்வையற்றோா் பிரிவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றாா்.
முத்தம்பட்டி திவ்யா காதுகேளாதோா் பிரிவில் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், சோமம்பட்டி கலைச்செல்வி உடல் இயக்கக் குறைபாடு பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றனா்.
மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற மாற்றுத்திறனாளிக்கு சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் சிவரஞ்சன் சான்றிதழ் மற்றும் பதக்கங்களை திங்கள்கிழமை வழங்கினாா்.
மாவட்ட அளவில் தங்கம் வென்றதோடு, அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தோ்வாகியுள்ள மாற்றுத்திறனாளி மஞ்சுளாவிற்கு டாக்டா் ஏபிஜே அப்துல்கலாம் மாற்றுத்திறனாளிகள் சங்க நிா்வாகிகள் மற்றும் சமூக ஆா்வலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.