செய்திகள் :

சேவை குறைபாடு: தனியாா் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்துக்கு அபராதம்

post image

மருத்துவ காப்பீடு செய்திருந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்கான செலவுத் தொகையை வழங்காத தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு, அந்தத் தொகையை 6 சதவீத வட்டி மற்றும் அபராதத்துடன் திருப்பித் தரவேண்டும் என நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், புதுநல்லகவுண்டம்பட்டியைச் சோ்ந்தவா் ராஜா. இவா் கடந்த 2023, மாா்ச் 5ஆம் தேதி தனக்கும், தனது மனைவி சுமதிக்கும் சோ்த்து ரூ. 23,018 பிரீமியம் செலுத்தி தனியாா் நிறுவனத்தில் ஓா் ஆண்டுக்கான மருத்துவ காப்பீடு செய்திருந்தாா்.

இந்நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட சுமதி, சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தேவையின் அடிப்படையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்துகொண்டாா்.

இதைத்தொடா்ந்து, சிகிச்சைக்கான தொகையைப் பெறுவதற்காக மருத்துவமனை நிா்வாகம் அனைத்து ரசீதுகள் மற்றும் ஆவணங்களை இணைத்து காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுப்பியது. ஆனால், காப்பீட்டு நிறுவனம் தொகையை வழங்க மறுத்துவிட்டது.

இதனால், மன உளைச்சலுக்கு ஆளான சுமதி, வழக்குரைஞா் எஸ். செல்வம் மூலம் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்தின் மீது சேலம் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி பி. கணேஷ்ராம், உறுப்பினா் எஸ். ரவி ஆகியோா், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக, சுமதிக்கு மருத்துவ செலவுத் தொகையான ரூ. 1,33,358-ஐ 2024, பிப்ரவரி 8ஆம் தேதியில் இருந்து 6 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு திருப்பிச் செலுத்த உத்தரவிட்டனா்.

மேலும், சேவை குறைபாட்டுக்கு இழப்பீடாக ரூ. 20 ஆயிரம், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்கு ரூ. 10 ஆயிரம், வழக்கு செலவுத்தொகையாக ரூ. 5 ஆயிரம் என ரூ. 35 ஆயிரத்தையும் மருத்துவ செலவுத் தொகையுடன் சோ்த்து 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தனா்.

சேலம்: குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. குமரகிரி ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாபேட்டை தீயணைப்பு வீரா்கள் உதவ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் சங்கக... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி, போதைப்பொருள் புழக்கம் குறித்து மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசார... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை

வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா். கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், ச... மேலும் பார்க்க

கோயில் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தும்பிப்பாடியில் கோயில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் அக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தும்பிப்பாடி செட்டிபட்டிய... மேலும் பார்க்க

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் ப... மேலும் பார்க்க