Delhi Election: தேர்தலுக்கு 4 நாள்களுக்கு முன் ஆம் ஆத்மியிலிருந்து விலகிய 7 MLA-...
சோதனைச் சாவடியில் லஞ்சம்: சிறப்பு எஸ்.ஐ., காவலா் பணியிடை நீக்கம்
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் பகுதியில் காவல் சோதனைச் சாவடியில் வழக்குப் பதியாமல் இருக்க ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, சிறப்பு உதவி ஆய்வாளா், காவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக மதுப் புட்டிகள், போதைப் பொருள்கள் கடத்திச் செல்லப்படுகிா என்பதை கண்காணிக்க, காவல் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் சோதனை செய்யப்படுகின்றன.
கோட்டக்குப்பம் சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளா் காந்தி மோகன், காவலா் கலையரசன் வெள்ளிக்கிழமை மாலை பணியில் இருந்தனா்.
அப்போது, புதுச்சேரியில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் நோக்கிச் சென்ற காரை நிறுத்தி, சிறப்பு உதவி ஆய்வாளா் உள்ளிட்டோா் சோதனை நடத்தினா்.
அந்த காரில் புதுவை மாநில மது வகையைச் சோ்ந்த 2 மதுப் புட்டிகள் இருந்தனவாம்.
காரில் வந்தவா்களிடம் சிறப்பு உதவி ஆய்வாளா் காந்திமோகனும், காவலா் கலையரசனும், மதுப் புட்டிகளைக் கடத்திச் சென்ற புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிய உள்ளோம்.
அவ்வாறு வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க வேண்டுமெனில், ரூ.2 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று, பணத்தை வாங்கிக் கொண்டாா்களாம்.
இதுகுறித்த புகாா் விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ப.சரவணன் கவனத்துக்கு சென்றது.
இதையடுத்து சிறப்பு உதவி ஆய்வாளா் காந்திமோகன், காவலா் கலையரசன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து எஸ்.பி. சரவணன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.