செய்திகள் :

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

post image

ஜப்பானில் திங்கள்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நாட்டின் மியாஸாகி பகுதியில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 6.9 அலகுகளாகப் பதிவானதாக ஜப்பான் நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

பூமிக்கு 30 கி.மீ. ஆழத்தில் உள்ளூா் நேரப்படி இரவு 9.19 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, மியாஸாகி, க்யூஷு தீவு, கோச்சி ஆகிய பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.

புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் ஜப்பான் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்பட்டுவருகின்றன.

தென் கொரிய அதிபர் மீதான கைது நடவடிக்கை மீண்டும் தோல்வி!

தென்கொரியா அதிபர் யூன் சுக் இயோலை இரண்டாவது முறையாக கைது செய்ய சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் முயற்சித்தனர்.தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோல் மீதான கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் விவகாரத்தில், அவரைக் கைது ச... மேலும் பார்க்க

பசுவுடன் பாலியல் உறவுக்கு முயன்றவர் பலி?

பிரேசிலில் மதுபோதையில் பசுவுடன் பாலியல் உறவுக்கு முயன்றவர், பசு உதைத்ததில் பலியானார்.பிரேசில் நாட்டில் லாஜே டா ஜிபோயா என்ற கிராமத்தில் பண்ணையில் பால் கறக்கும் பணியாளராகப் பணிபுரிந்து வந்த இருவரும் கடந... மேலும் பார்க்க

கிரீன்லாந்தை வாங்க புது முயற்சி! ஆதரவு சேகரிக்கும் டிரம்ப் கட்சியினர்!

கிரீன்லாந்தை டிரம்ப் வாங்குவதற்காக புதிய மசோதாவை அமெரிக்க அவையில் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது.அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்தை வாங்கும் முயற்சியில் முறையான ப... மேலும் பார்க்க

சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் 36 பேர் பலி!

தென்னாப்பிரிக்காவில் சுரங்கத்துக்குள்ளேயே உணவு, நீரின்றி வாரக்கணக்கில் பதுங்கியிருந்த 36 பேர் பலியாகினர்.தென்னாப்பிரிக்காவில் பழைய தங்கச் சுரங்கப் பகுதிகளில் சட்டவிரோதமாக தங்கம் தோண்டப்பட்டு வருகிறது.... மேலும் பார்க்க

பொய்கூறி விடுப்பு எடுப்பவர்களைக் கண்காணிக்கும் துப்பறிவாளர்கள்!

ஜெர்மனியில் நோய்வாய்ப்பட்டு விடுப்பு எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதன் உண்மைத்தன்மையை அறிய துப்பறியும் அதிகாரிகளை நிறுவனங்கள் நியமித்து வருகின்றன. ஜெர்மனியில் பல்வேறு நிறுவனங்களில் பண... மேலும் பார்க்க

மெட்டா பணியாளர்களுக்கு ரூ. 4 கோடியுடன் பணிநீக்கம்!

இந்தாண்டுக்குள் மூன்றாம் நிலை மென்பொறியாளர்களை நீக்கப்போவதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.உலகளவில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களை நீக்கிவிட்டு, மாற்றாக செயல் நுண்ணறிவை ... மேலும் பார்க்க