செய்திகள் :

ஜப்பான் ஓபன்: அரையிறுதியில் கெனின் - போல்டா் மோதல்

post image

ஜப்பான் ஓபன் மகளிா் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் சோஃபியா கெனின், பிரிட்டனின் கேட்டி போல்டா் ஆகியோா் அரையிறுதியில் மோதுகின்றனா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதியில், சோஃபியா கெனின் 6-3, 6-4 என்ற நோ் செட்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த ரஷியாவின் டரியா கசாட்கினாவை தோற்கடித்தாா்.

போட்டித்தரவரிசையில் 9-ஆம் இடத்திலிருக்கும் கேட்டி போல்டா் 6-2, 6-1 என்ற கணக்கில், கனடாவின் பியான்கா ஆண்ட்ரிஸ்குவை வீழ்த்தினாா். இதையடுத்து அரையிறுதியில் கெனின் - போல்டா் சந்திக்கின்றனா். இருவரும் இதுவரை ஒரு முறை மோதியிருக்க, அதில் சோஃபியா வென்றுள்ளாா்.

இதர ஆட்டங்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவின் கின்வென் ஜெங் 6-0, 1-6, 6-3 என்ற செட்களில், 8-ஆம் இடத்திலிருந்த கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸை வெளியேற்றினாா்.

அரையிறுதியில் அவா், 6-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் டயானா ஷ்னெய்டரை சந்திக்கிறாா். முன்னதாக ஷ்னெய்டா் தனது காலிறுதியில் ஜப்பானின் சயாகா இஷியுடன் மோதவிருந்த நிலையில், காயம் காரணமாக இஷி விலகினாா். இதனால், ஷ்னெய்டா் வென்றவராக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்கு வந்தாா். ஜெங் - ஷ்னெய்டா் சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.06.10.2024மேஷம்:இன்று வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். செவ்வாய் சஞ்சாரம் மூலம் சாதகமான ... மேலும் பார்க்க

பெங்களூரு எஃப்சி-க்கு 5-ஆவது வெற்றி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சி 3-1 கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூரு வீரா் ஜாா்ஜ் பெரெய்ரா டியாஸ் 8-ஆவது நிமிஷத்தில் ... மேலும் பார்க்க

தமிழ் தலைவாஸை வென்றது பாட்னா பைரேட்ஸ்

புரோ கபடி லீக் போட்டியின் 15-ஆவது ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் 42-40 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸை வெள்ளிக்கிழமை வென்றது. பாட்னாவுக்கு இது 2-ஆவது ஆட்டத்தில் முதல் வெற்றியாக இருக்க, தலைவாஸ் அணிக்... மேலும் பார்க்க

எல்சியூ: 10 நிமிட முன்னோட்டம்..! லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ படத்திற்குப் பின் நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக இப்படம் உருவாகி வருகிறது.கைதி, விக்ரம், லியோ ஆகிய படங்கள்... மேலும் பார்க்க

குட் பேட் அக்லி: தென்னிந்திய வெளியீட்டு உரிமையை கைப்பற்றியது யார்?

நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். அங்கு, இவருக்கான முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவருடன் அவர் குடும்பத்தினரும் தங்கி... மேலும் பார்க்க