செய்திகள் :

TVK: ஈழத் தமிழர், மீனவர் படுகொலை, ஜல்லிக்கட்டு - 'நடிகர்' விஜய்யின் அரசியல் நகர்வுகள் என்னென்ன?

post image
விஜய், தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக 2009ம் ஆண்டு மாற்றினார்.

விஜய்யின் பிறந்த நாளான ஒவ்வொரு ஜூன் 22-ம் தேதி அன்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவுவது, அன்னதானம், இரத்ததானம் நடத்துவது எனச் சமூக சேவைகள் செய்து வந்தனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். ஆனால், 2010, 2011ஆம் ஆண்டுகளில் ரசிகர்களை அரசியல் பக்கம் திருப்பினார் விஜய். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு, மீனவர்கள் பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்து ஆர்ப்பாட்டங்கள், இலங்கைத் தமிழருக்கான உண்ணாவிரதப் போராட்டம் போன்றவற்றை நடத்தினர். 'ஈழ இனப்படுகொலையைச் செய்த ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்' என்று ஜெயலலிதா பேசியதை வரவேற்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். அந்த சமயத்தில் ஜெயலலிதாவிற்கு ஆதரவாக, அ.தி.மு.கவிற்குப் பிரசாரக் களத்திலும் இறங்கினர் விஜய் மக்கள் இயக்கத்தினர். அ.தி.மு.கவும் அந்தத் தேர்தலில் விஜயகாந்த்தின் தே.மு.தி.கவுடன் கூட்டணி அமைத்து 2011ம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்தது.

விஜய்

அ.தி.மு.க- ஜெயலலிதா ஆதரவு

இதையடுத்து சேலத்தில் மிகப்பெரிய விஜய் மக்கள் இயக்கக் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய விஜய், "உங்களால்தான் நான் வளர்ந்தேன். அதனால், என்னை வச்சு நீங்க எல்லாரும் ஒரு நல்ல நிலைமைக்கு வரணும். அதுதான் என்னோட ஆசை. எங்க அப்பா கஷ்டப்பட்டு உழைச்சு வாழ்க்கையில ஜெயிச்சு இயக்குநரானார். நான் நடிகராக ஆசைப்பட்டு வந்து, பல அவமானங்கள், தோல்விகளைச் சந்திச்சு இன்னைக்கு ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருக்கேன். எங்க அப்பா எனக்குப் போட்டுக் கொடுத்த ஒரு புள்ளிய, உங்களோட ஆதரவோட ஒரு அழகான கோலமாக மாத்திட்டேன். நீங்க ஒவ்வொருத்தரும் முன்னேறி வாழ்க்கையில ஒரு நல்ல இடத்துக்கு வரனும்.

'இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்' என்ற எம்.ஜி.ஆர் வரிகளைத்தான் நான் எப்போதும் மனசுல வச்சுக்குவேன். நீங்களும் அதையே மனசுல வச்சு வாழ்க்கையில சாதிக்கணும். வெவ்வேறு கட்சிகளிலிருந்தாலும் புரட்சித் தலைவி ஜெயலலிதா அம்மாவிற்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு நன்றி" என்று உணர்ச்சிகரமாகப் பேசியிருந்தார். தேர்தல் அரசியல் குறித்தும் அ.தி.மு.க- ஜெயலலிதா ஆதரவு குறித்தும் விஜய் வெளிப்படையாகப் பேசி, ரசிகர்களுக்கு அரசியல் விதையைத் தூவியிருந்தார்.

அதன்பிறகு அரசியல் பேசும் திரைப்படமாக 'தலைவா' படத்தில் நடித்தார். இப்படத்தைத் திரையிட பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பின. அந்த சமயத்தில் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவிடம் உதவி கேட்பதற்காக அவரைச் சந்திக்க, கொடநாடு பங்களா வாசலிலேயே காத்திருந்தது, பிறகுப் பார்க்கக்கூட அனுமதி கிடைக்காமல் காணொலி மூலம் உதவிகள் கேட்டது விஜய்யின் அரசியல் பாதையை அப்படியே மடை மாற்றியது. அதன்பிறகு, எந்த அரசியல் கட்சிகளின் அடையாளமுமின்றி பயணிக்க ஆரம்பித்தார். 2017ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் நடந்த மாபெரும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்குக் குரல் கொடுத்த அவர் மீது ஒரு நல்ல பிம்பத்தை ஏற்படுத்தியது.

விஜய்

மாணவி அனிதாவின் வீட்டுக்குத் திடீரென வருகை தந்த விஜய், அனிதாவின் சகோதரரிடம், “இறந்தது என் தங்கை; அண்ணனிடம் எப்போது வேண்டுமானாலும் உதவி கேளுங்கள்” என்று கூறியிருந்தார்.

ஒரு விரல் புரட்சியே...

அதன்பிறகு பொதுவெளியில் அரசியல் பேசுவதைக் கொஞ்சம் தவிர்த்துத் திரைப்படங்களில் அரசியல் பேச ஆரம்பித்தார். 2ஜி வழக்கைக் குறிப்பிட்டு, 'கத்தி' திரைப்படத்தில் அரசியல் பேசியிருந்தார். 'ஒரு விரல் புரட்சியே' என 'சர்கார்' படத்தில் தேர்தல் அரசியல் பற்றிப் பேசியிருந்தார். ஜெயலலிதா, கலைஞர் இரு ஆளுமை அரசியல்வாதிகள் மறைவிற்குப் பிறகு அரசியலில் வெற்றிடம் ஏற்பட கமல், ரஜினி தேர்தல் அரசியலில் இறங்க முழு வீச்சுடன் இறங்கினார்கள். அதில் ரஜினி பின்வாங்கிவிட, கமல் 'மக்கள் நீதி மய்யம்' கட்சியை ஆரம்பித்தார்.

இதற்கிடையில் விஜய், அவசரம் காட்டாமல் மெல்ல மெல்லத் தனது அரசியல் காய்களை நகர்த்தி வந்தார். நேரடியாக 2019ம் ஆண்டு ஊராட்சி மன்றத் தேர்தலில் விஜய் இறங்கவில்லை என்றாலும், தேர்தலின் ஆழம் பார்க்க ரசிகர்களை இறக்கிவிட்டார். அதில் கணிசமான வெற்றிகள் கிடைக்க, அரசியலில் தீவிரமாக இறங்கத் திட்டங்கள் வகுக்க ஆரம்பித்தார். அதன்பிறகு மாணவ - மாணவிகளைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கும் விழாவைப் பெரிதாக நடத்தத் தொடங்கினார். மாவட்டம் தோறும் பயிலரங்களை அமைப்பது, கல்விக்கு உதவுவது, 'காமராஜர், பெரியார், அம்பேத்கரைப் படியுங்கள்' என அறிவுரை வழங்கியது என முழுத் தீவிரமாக அரசியலில் இறங்கப்போவதை வெளிப்படுத்தி வந்தார்.

விஜய்

தமிழக வெற்றிக் கழகம்

சினிமாவின் உச்சத்தில் இருப்பதை அப்படியே விட்டுவிட்டு, முழு நேர அரசியலில் இறங்குவதாகச் சொன்னார். சொன்னபடியே 2024, பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதியன்று தனது அரசியல் கட்சியான 'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியை அறிவித்தார். விஜய் மக்கள் இயக்கத்தினர் 'த.வெ.க' தோழர்களாக மாறி அரசியல் களத்தில் அடியெடுத்து வைத்த நாள் அது. 'தமிழக வெற்றிக் கொள்கைத் திருவிழா' என வரும் அக்டோபர் 27ம் தேதி மிகப்பெரிய மாநாட்டை நடக்கிறது அக்கட்சி. அம்மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை அறிவிக்கவுள்ளார் விஜய்.

மிகத் தெளிவான அரசியல் நகர்வுகள், பயிற்சி வகுப்புகள் நடத்தி ரசிகர்களை அரசியல்படுத்துதல், 'காமராஜர், பெரியார், அம்பேத்கர்' போன்ற தலைவர்களை அரசியல் வழிகாட்டிகளாக முன்வைப்பது என ஒவ்வொரு நகர்வையும் அழுத்தமாக எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார் விஜய்.

கமல், ரஜினிக்கு இருந்த எதிர் விமர்சனங்கள் விஜய்க்கு இல்லை. விஜய் கட்சி ஆரம்பித்ததிலிருந்து நல்ல செய்திகளும், வாழ்த்துகளும் வருகின்றன. இவையெல்லாம் 'த.வெ.க' தொண்டர்களுக்குப் பெரும் நம்பிக்கை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்த நம்பிக்கை தமிழ்நாட்டு மக்களுக்கும் ஏற்படுமா என்பதை இனி வரும் தேர்தல்களே சொல்லும்..!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Wayanad bypoll result: 5 லட்சம் வாக்குகளை கடந்த பிரியங்கா, வசமாகும் வயநாடு!

வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கிய பிரியங்கா காந்தி முதல் சுற்றிலேய முன்ன... மேலும் பார்க்க

`ரஜினியின் அழைப்பு... போயஸ் கார்டனில் சீமான்.!’ - சந்திப்பின் பின்னணி

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை நாம் தமிழர் கட்சி கடுமையாக விமர்சித்துவரும் சூழலில் நடிகர் ரஜினியை சீமான் சந்தித்திருப்பதுதான் தமிழ்நாடு அரசியலில் டிரெண்டிங். ரஜினி - சீமான் சந்திப்பு பின்னணிய... மேலும் பார்க்க

'ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமரா வைக்க ரூ.20,000 கோடிக்கு டெண்டரா?' - ரயில்வே அமைச்சகம் சொல்வதென்ன?

ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு இந்திய ரயில்வே 20,000 கோடி ரூபாய்க்கு டெண்டர் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. `சிசிடிவி கேமரா பொருத்த 20,000 கோடியா...' என இது தொடர்பாகப் பல்வே... மேலும் பார்க்க

`சம்பாதிக்கும் பணமெல்லாம் குடிநீர் வாங்கவே செலவாகிறது' - க.தர்மத்துப்பட்டி கிராம மக்கள் வேதனை

திண்டுக்கல் மாவட்டம், க.தர்மத்துப்பட்டி கிராமத்தில் பொதுமக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. சில வருடங்களாகவே ஊராட்சி நிர்வாகம், குடிநீர் மற்றும் இதர தேவைகளுக்கான தண்ணீரினை சரியாக... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான்: இஸ்லாமுடன் முரண்படும் நூல்களுக்குத் தடை விதிக்கும் தாலிபன்கள்!

ஆப்கானிஸ்தானில் இறக்குமதி செய்யப்பட்ட புத்தகங்களை சோதனை செய்தல், தடை செய்யப்பட்ட தலைப்புகளின் கீழுள்ள புத்தகங்களை நூலகங்களிலிருந்து அகற்றுதல் மற்றும் அதன் விநியோகத்தை தடுத்தல் போன்ற இஸ்லாமுக்கு மாறான ... மேலும் பார்க்க

``சீமான் அறிவிக்கப்படாத எதிர்க்கட்சித் தலைவர்” - அதிமுகவை சீண்டும் NTK மணிசெந்தில்

``நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் விலகுவது தொடர்கதையாகிவிட்டதே... உங்கள் கட்சியில் என்ன பிரச்னை?” ``வளர்ந்துவரும் அரசியல் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகுவதும், இணைவதும் போன்ற சாதாரண நிகழ்வுகளை ... மேலும் பார்க்க