வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நினைவுகள்..! நெகிழ்ந்த சிஎஸ்கே வீரர்!
ஜம்மு அருகே பாகிஸ்தான் நிலைகள், பயங்கரவாத ஏவுதளங்கள் அழிப்பு
ஜம்மு அருகே பாகிஸ்தான் நிலைகள் மற்றும் பயங்கரவாத ஏவுதளங்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது. மேலும், அங்கிருந்து குழாய் மூலம் ஏவப்படும் ட்ரோன்களும் ஏவப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதால், சனிக்கிழமை அதிகாலையில் பாகிஸ்தானில் உள்ள குறைந்தது நான்கு விமானப்படை தளங்கள் இந்தியத் தாக்குதல்களால் தாக்கப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியாக இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற நிலையில், நேற்றிரவு இந்தியாவின் எல்லைப்புற நகரங்களாக ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு - காஷ்மீர் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தானின் ஏவுகணைகளை நடுவானிலேயே அழித்து ஒழித்தனர். அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை அதிகாலை சர்வதேச எல்லை மற்றும் பாகிஸ்தானுடனான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் 26 இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய உடனேயே இந்தியா பதிலடித் தாக்குதல்களைத் தொடங்கியதாக பாதுகாப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுப்பாட்டுக் கோட்டின் பல இடங்களில் இடைவிடாத துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் தாக்குதலில் அரசு அதிகாரி பலி: ஒமர் அப்துல்லா இரங்கல்
இந்த தாக்குதலில் ஜம்மு அருகே பாகிஸ்தான் நிலைகள் மற்றும் பயங்கரவாத ஏவுதளங்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது. மேலும், அங்கிருந்து குழாய் மூலம் ஏவப்படும் ட்ரோன்களும் ஏவப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோட்டா, ஜம்மு, பதான்கோட், ஃபாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், பூஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா ஆகியவை அடங்கும்.
பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் பகுதியில் பாகிஸ்தான் ட்ரோன்கள் மூலம் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர் மற்றும் பாதுகாப்புப் படையினரால் அந்தப் பகுதிகள் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.மேலும் இதுபோன்ற அனைத்து வான்வழி அச்சுறுத்தல்களும் வான்வெளி பாதுகாப்புப் படையினர் கண்காணிக்கப்பட்டு ஈடுபடுத்தப்படுகின்றன.
வெளியே வரவேண்டாம்
ஜம்மு - காஷ்மீரின் எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடு மற்றும் பதுங்கு குழிகளுக்குள் இருக்குமாறும், தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அச்சப்படத் தேவையில்லை என்றாலும், அதிக விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை அவசியம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில், திப்பர் பகுதியில் ஏற்பட்ட பலத்த வெடிப்புக்குப் பிறகு புகை எழுவதைக் காண முடிந்தது. ரஜௌரி பகுதியில், தொடர் வெடிப்புகளுக்குப் பிறகு வீடுகள் மற்றும் பிற கட்டடங்கள் சேதமடைந்தன. ரஜௌரி மற்றும் அக்னூரிலும் பலத்த குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டன.
இதற்கிடையில், பஞ்சாபில், ஜலந்தரின் கிராமப்புறத்தில் உள்ள கங்கானிவால் கிராமத்தில் ஒரு வீட்டை ட்ரோன் தாக்குதலில் தரைமட்டமானது.