``குடிமக்களாகிய நமது முதன்மையான பொறுப்பு" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவு...
Rain Update: எந்தெந்த மாவட்டங்களில் 24-ம் தேதி வரை மழை; முழு விவரம்
தற்போது இந்திய வானிலை மையத்தின் அறிக்கைப்படி, 'தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது'.
இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 24-ம் தேதி வரையில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
இதனால், புதுச்சேரி முதல் ராமநாதபுரம் வரை உள்ள கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும். ஏற்கெனவே மழை பெய்து வரும் மாவட்டங்களில் மழை இன்னும் வலுபெறும் வாய்ப்புகள் உள்ளது. காவிரி படுகையில் உள்ள மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்...
"தென்கிழக்கு அரபிக்கடலில் கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
நேற்று முன்தினம் (அக்டோபர் 19), தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்ந்து நேற்று (அக்டோபர் 20) காலை 8.30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. இது, மேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்" என்று கூறப்பட்டிருந்தது.