பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலி...
Rain Updates: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு Red Alert; வானிலை மையத்தின் புதிய அறிவிப்பு என்ன?
சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது சில மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரெட் அலர்ட்
இன்று செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில் பயங்கர இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யலாம்.
.jpeg)
ஆரஞ்சு அலர்ட்
தமிழ்நாட்டில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
மஞ்சள் அலர்ட்
அரியலூர், கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம்.
இந்த அறிக்கை இன்று மாலை 4 மணி வரைக்கானது ஆகும்.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) October 21, 2025