பட்டாசு குப்பைகளை அகற்றிய எம்.பி. சச்சிதானந்தம்; உடன் சேர்ந்த இந்திய ஜனநாயக வாலி...
டெல்லி: இரட்டை கொலையில் முடிந்த திருமணம் மீறிய உறவு; கர்ப்பிணி காதலியைக் குத்திக்கொன்ற இளைஞர்
டெல்லி ராம் நகரில் வசித்து வருபவர் ஆகாஷ். இவரது மனைவி சாலினி ஆட்டோ டிரைவர். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. சாலினிக்கு சைலேந்திரா என்பவருடன் திருமணம் தாண்டிய உறவு இருந்து வந்தது.
தற்போது சாலினி கர்ப்பமாக இருந்தார். அந்தக் குழந்தைக்கு சைலேந்திராதான் தந்தை என்று கூறப்படுகிறது. இதனால் ஆகாஷை விட்டுவிட்டு தன்னுடன் வந்து வாழும்படி சைலேந்திரா கேட்டுக்கொண்டார். ஆனால் குழந்தை மற்றும் கணவனைக் காரணம் காட்டி சைலேந்திராவுடன் வர மறுத்து வந்தார் சாலினி.
இதனால் ஆகாஷ் மீது சைலேந்திரா கோபத்தில் இருந்தார். ஆகாஷ் தனது மனைவி சாலினியை அழைத்துக்கொண்டு தனது தாயாரைப் பார்க்க சென்று கொண்டிருந்தார்.
அந்நேரம் அவரின் வருகைக்காகக் காத்திருந்த சைலேந்திரா தன்னிடம் இருந்த கத்தியால் ஆகாஷை வழிமறித்து தாக்கினார். ஆனால் அவரது தாக்குதலில் இருந்து ஆகாஷ் தப்பினார். அந்நேரம் ஆட்டோவில் சாலினி இருப்பதை சைலேந்திரா பார்த்தார்.

உடனே சாலினியை சைலேந்திரா தன்னிடம் இருந்த கத்தியால் சரமாரியாகக் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே கர்ப்பிணியான சாலினி கீழே விழுந்தார். சைலேந்திராவிடமிருந்து தனது மனைவியைக் காப்பாற்ற ஆகாஷ் முயன்றார்.
உடனே ஆகாஷையும் சைலேந்திரா கத்தியால் குத்தினார். இதனால் சைலேந்திராவிடமிருந்து கத்தியைப் பிடுங்கிய ஆகாஷ் அந்தக் கத்தியால் சைலேந்திராவை சரமாரியாகக் குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே சைலேந்திரா மற்றும் சாலினி ஆகியோர் உயிரிழந்தனர்.
சாலினியின் சகோதரர் ரோஹித்தும் போலீஸாரும் மூவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆகாஷ் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த போலீஸார் சாலினியின் தாயாரிடம் வாக்குமூலம் வாங்கி இருக்கின்றனர்.
சாலினியின் தாயார் ஷீலா அளித்துள்ள வாக்குமூலத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆகாஷ் மற்றும் சாலினி இடையே உறவில் விரிசல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் சாலினி, சைலேந்திராவுடன் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழத் தொடங்கினர்.
அதன் பிறகு ஆகாஷுடன் சாலினிக்குச் சமாதானம் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைகளுடன் ஆகாஷ் சாலினியுடன் சேர்ந்து வாழத் தொடங்கினர்'' என்றார்.