செய்திகள் :

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடித்து அழிப்பு

post image

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் பயங்கரவாதிகளின் மறைவிடம் ஒன்று கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறைவிடத்திலிருந்து இரண்டு வயர்லெஸ் பெட்டிகள், ஐந்து யூரியா பாக்கெட்டுகள், எரிவாயு சிலிண்டர், பைனாகுலர், மூன்று கம்பளி தொப்பிகள், மூன்று போர்வைகள் மற்றும் பாத்திரங்கள் மீட்கப்பட்டன. இரண்டு ஐஇடிகள் எஃகு வாளிகளுக்குள் புதைக்கப்பட்டிருந்ததோடு மூன்று டிபன் பாக்ஸ்களிலும் அடைக்கப்பட்டிருந்தன என்று அதிகாரிகள் கூறினர்.

பாகிஸ்தானுக்குச் செல்லும் தண்ணீர் நிறுத்தம்! அணைகளின் மதகுகள் மூடல்!

அரை கிலோ முதல் ஐந்து கிலோ வரை எடையுள்ள பயன்படுத்த தயாராகவிருந்த அனைத்து ஐஇடிகளும், அந்த இடத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. இதனால் எல்லை மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன என்று அதிகாரிகள் மேலும தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப். 22 நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். தாக்குதலைத் தொடா்ந்து தலைமறைவாகியுள்ள பயங்கரவாதிகளைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மே 7 அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை: மத்திய அரசு

புது தில்லி: மே 7-ஆம் தேதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. போர் நடைபெறும்போது, குடிமக்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டு... மேலும் பார்க்க

மாற்றி யோசித்த பெற்றோர்.. 10-ஆம் வகுப்பில் தோல்வி.. கேக் வெட்டிக் கொண்டாட்டம்

விரைவில் தமிழகத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில், கர்நாடக மாநில பெற்றோர்கள், தோல்வியடைந்த மகனுக்கு கேக் வெட்டிக் கொண்டாடிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.தேர்வில் தோல்வியட... மேலும் பார்க்க

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் சைபர் தாக்குதல்!

இந்திய பாதுகாப்புத்துறை இணையதளங்களைக் குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.இந்திய பாதுகாப்புத்துறையின் முக்கிய இணையதளங்களைக் குறிவைத்து பாகிஸ்தானைச் சேர்ந்த ஹேக்கர்கள்(இணையவழி... மேலும் பார்க்க

தமிழக மீனவர்களைக் காக்க நடவடிக்கை: பவன் கல்யாண் வேண்டுகோள்!

தமிழக மீனவர்கள் இன்னலகள் குறித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக மீனவர்களைக் காக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்... மேலும் பார்க்க

சுதந்திரத்துக்குப் பின்.. உ.பி. கிராமத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் மாணவர்

நாடு சுதந்திரம் அடைந்த பின் முதல் முறையாக உ.பி. கிராமத்தில் ஒரு மாணவர் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறார். மேலும் பார்க்க

ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை வழக்கு: தள்ளுபடி செய்தது அலாகாபாத் நீதிமன்றம்!

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி இரட்டை குடியுரிமை வழக்கை அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ராகுல் காந்தி இந்தியா, பிரிட்ட... மேலும் பார்க்க