செய்திகள் :

ஜாகிா் ஹுசைன் மறைவு: மோடி இரங்கல்

post image

பிரபல தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பிரபல தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன்(73) இதயம் சம்பந்தப்பட்ட உடல் நல பாதிப்பால், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி ஜாகிா் ஹுசைன் காலமானதாக அவரது குடும்பத்தினர் திங்கள்கிழமை தெரிவித்தனர்.

இதையும் படிக்க : தபேலா இசைக் கலைஞா் ஜாகிா் ஹுசைன் காலமானார்

அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“புகழ்பெற்ற தபேலா கலைஞர் ஜாகிா் ஹுசைன் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய பாரம்பரிய இசை உலகில் புரட்சியை ஏற்படுத்திய மேதையாக அவர் நினைவுகூரப்படுவார்.

அவர் தனது இணையற்ற தாளத்தால் கோடிக்கணக்கானவர்களைக் கவர்ந்து தபேலாவை உலக அரங்கிற்கு கொண்டு வந்தார். இதன் மூலம், உலகளாவிய இசையுடன் இந்திய பாரம்பரிய மரபுகளை தடையின்றி கலக்கினார்.

இதனால் கலாச்சார ஒற்றுமையின் சின்னமாக மாறினார். அவரது சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் மற்றும் ஆத்மார்த்தமான இசையமைப்புகள் இசையமைப்பாளர்கள் மற்றும் இசை ஆர்வலர்களின் தலைமுறைகளை ஒரே மாதிரியாக ஊக்குவிக்கும். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலக இசை சமூகத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

புஷ்பா - 2 பீலிங்ஸ் பாடல் விடியோ!

புஷ்பா - 2 படத்தில் இடம்பெற்ற பீலிங்ஸ் பாடலின் விடியோ வடிவம் வெளியாகியுள்ளது.நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் ரூ. 1300 கோடி வரை வசூலித்து ப... மேலும் பார்க்க

சூரி - ஐஸ்வர்யா லட்சுமி படத்தின் பெயர் போஸ்டர்!

நடிகர் சூரி நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது.நடிகர் சூரி விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களில் நாயகனாக நடித்து பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார். இதனால், இனி கதாந... மேலும் பார்க்க

பரோஸ் தமிழ் டிரைலர்!

நடிகர் மோகன்லால் இயக்கியுள்ள பரோஸ் திரைப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகியுள்ளது.மலையாளத்தில் 40 ஆண்டுகள் நடிகராக இருக்கும் மோகன்லால், பரோஸ் என்கிற 3டி படத்தை இயக்கியுள்ளார். இதில் மீரா ஜாஸ்மின், குருச... மேலும் பார்க்க

சூர்யா - 45 படத்தில் பிரபல நடிகர்கள்!

சூர்யா - 45 படத்தில் பிரபல நடிகர்கள் இணைந்துள்ளனர்.சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில், த்ரிஷா, ஸ்சு... மேலும் பார்க்க

துளிகள்...

மகளிா் பிரீமியா் லீக் போட்டிக்கான ஏலத்தில் அதிகபட்சமாக, இந்திய வீராங்கனை சிம்ரன் ஷேக் ரூ.1.9 கோடிக்கு குஜராத் ஜயன்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டாா். ஐஎஸ்எல் கால்பந்தாட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி - முகமிதா... மேலும் பார்க்க

ஜூனியா் மகளிா் ஆசிய ஹாக்கி: சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஓமனில் நடைபெற்ற 9-ஆவது ஜூனியா் மகளிா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்திய நடப்பு சாம்பியன் இந்தியா, கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இந்த அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதிய இறுதி ஆட்டம் 1-1 கோல் க... மேலும் பார்க்க