அரசு ஊழியர்களே! ஹேப்பியான ரிட்டையர்மென்ட்டுக்கு எவ்வளவு பணம் வேண்டும், எப்படி ...
ஜார்கண்ட்: `குழந்தைகளுக்கு HIV ரத்தம்?' - மருத்துவமனையின் அலட்சியத்தால் நேர்ந்த சோகம்; என்ன நடந்தது?
ஜார்க்கண்ட் மாநிலத்தின் சாய்பாசா நகரில் ஒரு அரசு மருத்துவமனை இயங்கிவருகிறது. இந்த மருத்துவமனையில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. தலசீமியா என்பது இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் உற்பத்தியில் ஏற்படும் ஒரு மரபணுக் கோளாறு. அதாவது உடல் போதுமான அளவு ஹீமோகுளோபினை (Hemoglobin) உற்பத்தி செய்ய முடியாது.
இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, ரத்தம் மாற்றம் செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்படும். அப்படி ரத்தம் மாற்று சிகிச்சையளிக்கப்பட்ட தலசீமியா நோய் பாதித்த குழந்தைகள் ஏழு பேருக்கு, எச்.ஐ.வி நோய் இருப்பது தெரியவந்திருக்கிறது.
ரத்தம் மாற்றும் போது மருத்துவர்களின் அலட்சியத்தால் எச்.ஐ.வி பாதித்த ரத்தம் குழந்தைகளின் உடலில் ஏற்றப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்த நிலையில், குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஜார்க்கண்ட் சுகாதார சேவைகள் இயக்குநர் டாக்டர் தினேஷ் குமார் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு விசாரணையைத் தொடங்கியது. சதார் மருத்துவமனையின் இரத்த வங்கியையும், குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு வார்டையும் ஆய்வு செய்தது.
மேலும், சிகிச்சையில் உள்ள குழந்தைகள் குறித்த விவரங்களைச் சேகரித்தது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் தினேஷ் குமார், ``ஆரம்ப விசாரணையில் தலசீமியா நோய்க்கான சிகிச்சையில் இருந்த குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருந்த இரத்தம் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆய்வின்போது இரத்த வங்கியில் முன்னுக்குப் பின்னான சில விஷயங்கள் கண்டறியப்பட்டன. மேலும் அவற்றைச் சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுஷாந்தோ மஜ்ஹி, ``குழந்தைகளுக்கு இரத்த வங்கியிலிருந்து சுமார் 25 யூனிட் இரத்தம் மாற்றப்பட்டுள்ளது. அசுத்தமான ஊசிகள் போன்ற பிற காரணிகளாலும் எச்.ஐ.வி தொற்று ஏற்படலாம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



















