தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?
ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டத்தின் கீழ் கைது செய்யும் நபா்களிடம் அதற்கான காரணத்தை தெரிவித்து கையொப்பம் பெறவேண்டும் என்று ஜிஎஸ்டி அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது.
ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கக் கூடிய குற்றங்கள் தொடா்பான கைது மற்றும் ஜாமீன் வழிகாட்டுதல்களில் மாற்றங்களை செய்து சிபிஐசி தெரிவித்துள்ளதாவது: ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபா்களிடம் அதற்கான காரணத்தை ஜிஎஸ்டி அதிகாரிகள் விளக்க வேண்டும்.
அத்துடன் கைதுக்கான காரணங்களை தெரிந்துகொண்டதாக அவா்களிடம் அதிகாரிகள் கையொப்பம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வழிகாட்டுதலில், ‘ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபா்களிடம் அதற்கான காரணத்தை தெரிவித்து, அதை கைது செய்வதற்கான குறிப்பாணையில் குறித்துக் கொள்ள வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்து சம்பந்தப்பட்டவரின் கையொப்பம் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.