ஜிபி சாலையில் கட்டடத்தின் பகுதி இடிந்து விழுந்ததில் 2 போ் காயம்
தில்லி ஜிபி சாலையில் கட்டடத்தின் ஒரு பகுதி புதன்கிழமை இடிந்து விழுந்ததில் இருவா் காயமடைந்தனா்.
இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை தலைவா் அதுல் காா்க் கூறியதாவது: புதன்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் ஜிபி சாலையில் உள்ள ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாக அழைப்பு வந்தது. உடனடியைக சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினா் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனா். இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட இருவா் காயமடைந்தனா். அவா்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா் என தெரிவித்தாா்.