செய்திகள் :

ஜெகந்நாதர் கோயிலில் குடியரசுத் தலைவர் முர்மு வழிபாடு!

post image

ஒடிஸாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாலை மார்க்கமாக சுமார் 1 கி.மீ நடந்துவந்து சுவாமி தரிசனம் செய்தார்.

குடியரசுத் தலைவர் சாதாரண பக்தரைப்போன்று கிரண்ட் சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்றபோது, சாலையின் இருபக்கமும் நூற்றுக்கணக்கான மக்கள் அணிவகுத்து நின்று அவரை வரவேற்றனர்.

கோயிலுக்கு வந்தடைந்த முர்மு பாலபத்திரர் (பலராமர்) அவரின் சகோதரர் ஜெகந்நாதர் (கிருஷ்ணர்), சகோதரி சுபத்ரா ஆகியோரை தரிசனம் செய்தார். தரிசனத்தில் இடையூரை தடுக்கும்வகையில் கோயில் சிறிதுநேரம் பொதுமக்கள் தரிசனத்திற்காக மூடப்பட்டது.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் அவரது மகள் இதிஸ்ரீ முர்முவுடன், ஒடிசா மோகன் சரண்மாஜி, துணை முதல்வர் பிரவதி பரிதா, புரி எம்பி சம்பித் பத்ரா மற்றும் பலர் இருந்தனர். 

வழிபாட்டுக்குப் பிறகு முர்மு கூறியது, 

ஜெகந்நாதரின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக வந்துள்ளேன். மக்களுக்காக பிரார்த்தனை செய்தேன். அவர்களின் நல்வாழ்வை விரும்புகிறேன் என்று அவர் கூறினார். 

கோயிலுக்குள் சுமார் 30 நிமிடங்கள் இருந்தார். கோயில் நிர்வாகத்தினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். வழிபாடு முடித்துக்கொண்டு மற்றொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்குக் கோயிலிலிருந்து புறப்பட்டுச் சென்றார். 

உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால்: ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை

நமது நிருபர்உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மக்களவையில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்தார்.இந்திய பல்கலைக்கழக... மேலும் பார்க்க

ஆன்லைன் செயலி மூலம் மருந்துகள் விநியோகம் செய்ய திமுக எம்.பி. எதிர்ப்பு

நமது நிருபர்"ஸ்விகி' உள்ளிட்ட உணவு விநியோக நிறுவனங்கள் மருந்துகள் விற்கும் செயல்பாடுகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினரும் மருத்துவருமான கனிமொழி என்... மேலும் பார்க்க

தகுதிவாய்ந்தவர்களுக்கு குடும்ப அட்டைகள்: மத்திய அமைச்சர் விளக்கம்

நமது நிருபர்தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மட்டுமே குடும்ப அட்டைகளை வழங்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உண... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா?

நமது நிருபர்மூத்த குடிமக்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் கரோனா காலத்தின்போது இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் கட்டணச் சலுகை மீண்டும் நடைமுறைக்கு வருமா என்று மக்களவையில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உற... மேலும் பார்க்க

"டெலிவரி' ஊழியர்களுக்கு பி.எஃப்., காப்பீடு: ஆன்லைன் முன்னணி நிறுவனம் மறுப்பதாக எம்.பி.புகார்

நமது நிருபர்இணைய வழி டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்), காப்பீடு உத்தரவாதத்தை முன்னணி நிறுவனம் மறுத்து வருவதாக மக்களவையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூ... மேலும் பார்க்க

ரயில்வே திட்ட நிலம்: முதல்வருடன் ஆலோசிக்க அதிகாரிகளை அனுப்பத் தயார்

நமது நிருபர்ரயில்வே திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்துவதில் உள்ள தாமதம் தொடர்பான விவகாரத்தை தீர்ப்பதற்காக தமிழக முதல்வருடன் ஆலோசிக்க ரயில்வே அதிகாரிகளையோ அல்லது இணை அமைச்சரையோ அனுப்ப தாம் தயாராக இருப... மேலும் பார்க்க