செய்திகள் :

ஜெயங்கொண்டத்தில் கருணாநிதி சிலை திறப்பு!

post image

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வருகை தந்துள்ளார்.

இதையும் படிக்க | 4 நாள்களுக்குப் பிறகு உயர்ந்த தங்கத்தின் விலை! எவ்வளவு?

அந்தவகையில், ஜெயங்கொண்டத்தில் நகராட்சி அலுவலகம் அருகே திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(வெள்ளிக்கிழமை) திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சிவசங்கர், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க | 15,000 பேருக்கு வேலை: காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!

தொடர்ந்து, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மகிமைபுரத்தில் 130 ஏக்கரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

நெய்வேலி என்எல்சியின் முதல் அனல்மின் நிலையம் இடிக்கப்படுவது ஏன்?

நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சியின் முதல் அனல்மின் நிலையத்தை இடிக்கும் பணி தொடங்கியிருக்கிறது. இது இடிக்கப்படுவது ஏன் என்பது பற்றி..கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ளது என்எல்சி அனல் மின் நிலையம... மேலும் பார்க்க

திமுக, அதிமுக இரண்டுமே ஒன்றுதான்: உயர் நீதிமன்ற நீதிபதி

சென்னை: திமுக, அதிமுக என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஒன்றுதான், இரண்டு கட்சிகளுக்கும் மக்களைப் பற்றிய அக்கறை இல்லை. சொந்தக் கட்சியைப் பற்றி மட்டுமே உங்களுக்கு அக்கறை இருக்கிறது என்று சென்னை உயர் ... மேலும் பார்க்க

கோவையில் துக்க வீட்டில் தீவிபத்து.. ஒருவர் பலி; மூவர் படுகாயம்!

கோவையில் துக்க வீட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் உறவினர் ஒருவர் பலியான நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் ராமலட்... மேலும் பார்க்க

கிண்டி மருத்துவமனையில் இளைஞர் பலி! மருத்துவர்கள் இல்லை எனக் குற்றச்சாட்டு!

கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.மருத்துவர்கள் போராட்டத்தால் சரியான சிகிச்சை கிடைக்காததால்தான் உயிரிழப்பு ... மேலும் பார்க்க

'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டம்: முதல்வர் தொடக்கிவைத்தார்!

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று(நவ. 15) தொடக்கிவைத்தார். தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட... மேலும் பார்க்க

ஞாயிறு வரை இதே நிலை நீடிக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை: இரவு முழுக்க மிதமான மழை, பகலில் அவ்வப்போது லேசான மழை போன்ற நிலையே வரும் ஞாயிறு வரை நீடிக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறியிருக்கிறார்.மழை நிலவரம் குறித்து ஆய்வு செய்து, அவ்வப்போது தனது சமூக... மேலும் பார்க்க