செய்திகள் :

டாக்ஸிக் புதிய அறிவிப்பு!

post image

நடிகர் யஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப், கேஜிஎஃப் - 2 படங்களில் நடித்து இந்திய சினிமாவில் ஸ்டாரானவர் நடிகர் யஷ். உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம் ரூ.1000 கோடிக்கு அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.

தொடர்ந்து, யஷ் மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் தன் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

இதையும் படிக்க: தென்னாப்பிரிக்காவில் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பு?

டாக்ஸிக் (Toxic) எனப் பெயரிட்டுள்ள இப்படம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது.

இந்த நிலையில், டாக்ஸிக் படத்தின் புதிய அறிவிப்பு நாளை மறுநாள் (ஜன.8) காலை 10.25 மணிக்கு வெளியாகும் என குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றைப் பகிர்ந்துள்ளனர்.

இந்த அறிவிப்பு படத்தின் வெளியீட்டுத் தேதியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மம்மூட்டி - கௌதம் மேனன் படத்தின் டிரைலர்!

மம்மூட்டி நடிப்பில் உருவாகியுள்ள மடோமினிக் அண்ட் த லேடீஸ் பர்ஸ் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கும் புதிய படத்தில் நடிகர் மம்மூட்டி நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில... மேலும் பார்க்க

டிராகன் படத்தை ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும்: பிரதீப் ரங்கநாதன்

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் படத்தின் 2ஆவது பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. இயக்குநராக மட்டுமல்லாது கதாநாயகனாகவும் முத்திரைப் பதித்துள்ள பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக அடுத்ததாக நடித்து வ... மேலும் பார்க்க

இந்திரா காந்தி பலவீனமானவர்..! கங்கனா ரணாவத் பேட்டி!

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி மிகவும் பலவீனமானவரென நடிகையும் எமர்ஜென்சி படத்தின் இயக்குநருமான கங்கனா ரணாவத் பேட்டியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1975இல் பிரகடனப்படுத்திய 21 மாதங்கள் ... மேலும் பார்க்க

நடிகை ஹனி ரோஸ் பாலியல் புகார்: தொழிலதிபர் கைது!

கொச்சி : மலையாள நடிகை ஹனி ரோஸ் அளித்துள்ள பாலியல் புகாரரின் அடிப்படையில் தொழிலதிபர் பாபி செம்மானூர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் காவல் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.தன்னைக் குறிவைத்து... மேலும் பார்க்க

நேசிப்பாயா பாடல் உருவானது எப்படி? படக்குழு வெளியிட்ட விடியோ!

நேசிப்பாயா படத்தின் தலைப்பு பாடல் அறிவிப்பை குறித்து படக்குழு விடியோ வெளியிட்டுள்ளது. மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தை விஷ்ணு வரதன் இயக்கி வருகிறார். ‘நேசிப்பாயா’ எனப... மேலும் பார்க்க

சூர்யா - ஆர். ஜே. பாலாஜி படத்தின் பெயர் இதுவா?

சூர்யா - 45 படத்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதில், த்ரிஷ... மேலும் பார்க்க