செய்திகள் :

டானா புயல்: உயிர் பலியில்லாத வகையில் முன்னெச்சரிக்கை- மோகன் சரண் மாஜி

post image

புவனேசுவரம்: டானா புயல் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையை கடந்தபோது, சூறைக்காற்றுடன் கனமழை பெய்த நிலையில், இந்த புயலால் ஒருவர் கூட பலியானதாகவோ காயமடைந்ததாகவோ தகவல் இல்லை என்று ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் பிதா்கனிகா தேசிய பூங்கா மற்றும் பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா துறைமுகம் இடையே வியாழக்கிழமை நள்ளிரவில் டானா புயல் கரையைக் கடக்கத் தொடங்கியது.

புயல் கரையைக் கடக்கத் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பாகவே 15 கி.மீ. வேகத்தில் காற்று வீசத் தொடங்கிய நிலையில் கரையைக் கடக்கத் தொடங்கியபோது 110.கி.மீ. வரை பலத்த காற்று வீசியது. வெள்ளிக்கிழமை காலை கரையைக் கடக்கும் வேளையில் அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசியுள்ளது.

டானா புயல் கரையைக் கடந்தபோது, ஒடிசா - மேற்கு வங்கத்தின் கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. ஒரு சில நாள்களுக்கு முன்பிருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது. லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு, ஒரு உயிரிழப்புக்கூட நேரிடாத வகையில் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தன.

இந்த நிலையில், ஒடிசா முதல்வர் பேசுகையில், ஒரு உயிரிழப்புக் கூட நேரிடக் கூடாது என்று வகையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதுபோல, சாலைகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் அறுந்துவிழந்திருப்பதும் கூட வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் அகற்றப்படும் என்றும், ஏற்கனவே சீரமைப்புப் பணிகளும் முழு வீச்சில் நடந்து முடிந்திருப்பதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இன்று மாலை 6 மணிக்குள் அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை

டானா புயல் காரணமாக இரு மாநிலங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனா். தென்கிழக்கு ரயில்வே மற்றும் கிழக்கு கடற்கரை ரயில்வே சாா்பில் இயக்கப்படும் 400-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டன; புவனேசுவரம், கொல்கத்தா விமான நிலைங்களில் விமானச் சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன.

முன்னெச்சரிக்கையாக, கேந்திரபாரா, பத்ரக், பாலசோா் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 2,000-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த சுமாா் 3.5 லட்சம் போ் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டதாக மாநில பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் சுரேஷ் பூஜாரி தெரிவித்திருந்தார்.

கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டது. கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

மேற்கு வங்கத்தில் 2.5 லட்சம் போ் வெளியேற்றம்!

டானா புயல் முன்னெச்சரிக்கையாக, மேற்கு வங்கத்தின் தெற்கு பகுதி மாவட்டங்களில் சுமாா் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனா். ஒடிசா மேற்கு வங்கம் உள்பட 5 மாநிலங்களில் மொத்தம் 56 தேசிய பேரிடா் மீட்புப் படை குழுக்கள் உள்பட பல்வேறு மீட்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

பாகிஸ்தானின் அப்போதாபாத்தில் புதிய பயங்கரவாத தொழிற்சாலை; தகவல்கள்

புது தில்லி: பாகிஸ்தானின் அப்போதாபாத்தில், மத்திய அரசால் பயங்கரவாத அமைப்புகள் என தடை செய்யப்பட்டிருக்கும் லஸ்கர்-இ-தொய்பா, ஹிஸ்புல்முஜாகிதீன், ஜெய்ஷ்-இ-முகமது ஆகிய அமைப்புகள் கூட்டாக பயங்கரவாத முகாமை ... மேலும் பார்க்க

குற்றவாளிகள் பெரிய ஆள்கள் என்பதால்.. சுஷாந்த் ராஜ்புத் வழக்கில் உச்ச நீதிமன்றம் காட்டம்

மும்பை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்தவர்களிடம் காட்டம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், குற்றவாளிகள் மிகப்பெரிய ஆள்கள் என்பதால்தானே என்று குறிப்பிட்டுள்ளது.மேலும், சுஷாந்த் சிங் ராஜ... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் டானா புயலுக்கு ஒருவர் பலி!

மேற்கு வங்கத்தில் டானா புயலுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்தார் வங்கக்கடலில் உருவான டானா புயல் அக்.24 நள்ளிரவில் தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையைக் கடந்தது. ... மேலும் பார்க்க

வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா!

மறைந்த டாடா குழுமத்தின் கௌரவத் தலைவர் தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளார்.மிகப்பெரும் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் தலைவருமான ரத்தன் டாடா மும்பையில் ... மேலும் பார்க்க

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹரியாணா எம்எல்ஏக்கள் பதவியேற்பு!

ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் 15-வது மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக... மேலும் பார்க்க

உ.பி.யில் தடம்புரண்ட சரக்கு ரயில்!

உத்தரப் பிரதேசத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானது.பஞ்சாப் மாநிலம் குரு ஹர் சஹாய் ரயில் நிலையத்தில் இருந்து உத்தரப் பிரதேச மாநிலம் சஹாரன்பூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொ... மேலும் பார்க்க