செய்திகள் :

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.84.32ஆக முடிவு!

post image

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.84.32 ஆக முடிவடைந்தது.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், சீன பொருட்களுக்கு கூடுதலாக 10% வரி விதிப்பேன் என்றும், மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பேன் என்று தெரிவித்ததால், ரிஸ்க் சென்டிமென்ட் பாதித்துள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: புதுவை, காரைக்கால்: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக ரூ.84.22 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.84.35 ஆகவும் சென்றது. டாலருக்கு எதிராக ரூ.84.32 என்ற தற்காலிக அமர்வில், இது அதன் முந்தைய முடிவை விட 3 பைசா சரிவை பதிவு செய்தது.

நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.84.29-ஆக இருந்தது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.79% உயர்ந்து பேரலுக்கு 73.59 டாலராக உள்ளது.

சீமென்ஸ் நிகர லாபம் 45% அதிகரிப்பு!

புதுதில்லி: ஜூலை முதல் செப்டம்பா் வரையான காலாண்டில், சீமென்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 45 சதவிகிதம் உயர்ந்து, ரூ.775 கோடி ரூபாயாக உள்ளது.செப்டம்பர் 2023 உடன் முடிவடைந்த காலாண்டில் நிறுவனம் ரூ.534 கோடி... மேலும் பார்க்க

தங்கம் விலை 2-வது நாளாக அதிரடி குறைவு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை அதிரடியாக குறைந்துள்ளது.கடந்த வாரம் முழுவதும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை ஒரு சவரன் ரூ. 58,40... மேலும் பார்க்க

காா் உற்பத்தியைக் குறைத்த மாருதி சுஸுகி!

இந்தியாவின் முன்னணி காா் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, கடந்த அக்டோபரில் காா்களின் உற்பத்தியை 16 சதவீதம் குறைத்துள்ளது. அதே நேரம், அந்த நிறுவனத்தின் பயன்பாட்டு வாகன உற்பத்தி 33 சதவீதம் அதிகரித்துள... மேலும் பார்க்க

அதானி குழுமத்தின் 5 நிறுவன பங்குகள் கடும் சரிவு!

அதானி மீதான நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை தொடர்ந்து, பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான டோட்டல் எனர்ஜிஸ், இந்திய நிறுவனத்தின் நிறுவனர் லஞ்ச குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்படும் வரை அதானி குழும... மேலும் பார்க்க

சோமேட்டோ பங்குகள் 4% உயர்வு!

புதுதில்லி: ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான, 'சோமேட்டோ' பங்குகள், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸின் ஒரு பகுதியாக மாறும் என்ற செய்தியைத் தொடர்ந்து, அந்நிறுவனப் பங்குகள் இன்று 4 சதவிகிதம் உயர்ந்தன.மு... மேலும் பார்க்க

லேவில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தை அமைத்த அமர ராஜா இன்ஃப்ரா!

மும்பை: என்டிபிசி லிமிடெட் நிறுவனத்திற்காக லடாக்கின் லே-வில் முதல் பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிலையத்தின் கட்டுமானத்தை முடித்துள்ளதாக அமர ராஜா இன்ஃப்ரா தெரிவித்துள்ளது.மத்திய மின்சாரம் மற்றும் வீட்டுவசத... மேலும் பார்க்க