டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 காசுகள் சரிந்து ரூ.86.71-ஆக முடிவு
மும்பை: வளர்ச்சி தூண்டுதல் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்த போதிலும், உலகளவில் அதிகரித்து வரும் கட்டண கொந்தளிப்புக்கு மத்தியில், இன்று அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் 45 காசுகள் குறைந்து ரூ.86.71 ஆக முடிந்தது.
பலவீனமாக அமெரிக்க டாலர், கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி, அந்நிய முதலீடுகளின் இடைவிடாத வெளியேற்றம் மற்றும் உள்நாட்டு பங்குச் சந்தைகளில் மந்தமான வர்த்தகம் காரணமாக இந்திய ரூபாய் அதிக அழுத்தத்தில் இருந்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.52 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது பிறகு அதிகபட்சமாக ரூ.86.47 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.86.71 ஐ தொட்ட நிலையில், முடிவில் 45 காசுகள் சரிந்து ரூ.86.71-ஆக முடிந்தது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 50 காசுகள் சரிந்து ரூ.86.26 ஆக முடிந்தது. ஜனவரி 13 ஆம் தேதிக்குப் பிறகு ரூபாயின் மிக மோசமான ஒற்றை நாள் சரிவு இதுவாகும்.
இதையும் படிக்க: அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் மீண்டும் சரிந்து முடிந்த பங்குச் சந்தை!