டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 50 காசுகள் சரிந்து ரூ.86.26-ஆக முடிவு!
மும்பை: தொடர்ந்து மூன்றாவது அமர்வாக சரிந்து, இன்று (செவ்வாய்க்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 50 காசுகள் சரிந்து ரூ.86.26 ஆக நிலைபெற்றது.
இது பொருளாதார இழப்பு குறித்த அச்சங்களைத் தூண்டும் உலகளாவிய வர்த்தகப் போருக்கு மத்தியில் கிட்டத்தட்ட மூன்று மாதங்களில் அதிகபட்ச ஒற்றை நாள் இழப்பாக அமைந்தது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 86.26 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், இது பிறகு அதிகபட்சமாக ரூ.85.82 ஆகவும், பிறகு குறைந்தபட்சமாக ரூ.86.29 ஐ தொட்ட நிலையில், முடிவில் 50 காசுகள் சரிந்து ரூ.86.26-ஆக முடிந்தது.
நேற்று (திங்கள்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 32 காசுகள் குறைந்து 85.76 ஆக முடிந்தது. அதே வேளையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று 14 காசுகள் குறைந்தது முடிந்தது.
இதையும் படிக்க: மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 1,089 புள்ளிகளுடனும், நிஃப்டி 374 புள்ளிகளுடன் நிறைவு!