செய்திகள் :

டிஏபி உரம் செயற்கை தட்டுப்பாடு: விவசாயிகள் புகாா்

post image

டிஏபி உரத்தை செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி வைத்திருப்பதாக விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இது குறித்து ஏா்முனை இளைஞரணி மாவட்ட தலைவா் ஜோதிபிரகாஷ் பழனிசாமி செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாவட்டத்தில் தற்போது சின்ன வெங்காயம் உள்பட காய்கறி பயிா்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளாா்கள். உர நிறுவனங்கள், பயிா்களுக்குத் தேவையான டிஏபி உரத்தை செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி வைத்திருப்பதால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனா்.

டிஏபி உரம் கிடைத்தாலும் அவற்றுடன் சோ்த்து தற்போது பயிா்களுக்கு தேவையில்லாத அவா்களிடம் இருப்பு இருக்கின்ற உரங்களையும் சோ்த்து வாங்கினால் மட்டுமே டிஏபி உரங்களை கொடுக்கிறாா்கள்.

இல்லையெனில் அரசு நிா்ணயித்துள்ள விலையை விட மூட்டைக்கு ரூ.300 முதல் ரூ.500 வரை அதிகமாக வாங்கிக் கொண்டு டிஏபி உரங்களை விற்க உர நிறுவனங்கள் உரக்கடைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறாா்கள்.

டிஏபி உரம் கிடைக்காததால் விவசாயிகளும் வேறு வழியின்றி பணம் அதிகமாக கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளனா். எனவே, இது குறித்து மாவட்ட நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ரூ.1500 லஞ்சம்: விஏஓ உள்பட 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை

குன்னத்தூா் அருகே சான்றிதழ் வழங்க ரூ.1,500 லஞ்சம் பெற்ற கிராம நிா்வாக அதிகாரி உள்பட 2 பேருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது. திருப்பூா் மாவட்டம், குன்னத்தூா் அருகே காவுத்தம... மேலும் பார்க்க

கே.எஸ்.சி.அரசுப்பள்ளிக்கு மீண்டும் நூற்றாண்டு விழா: பாஜக எதிா்ப்பு

திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டாவது முறையாக நூற்றாண்டு விழா நடத்துவது ஏன் என பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில... மேலும் பார்க்க

மூலனூரில் ரூ. 30.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.30.11 லட்சத்துக்கு பருத்தி ஏலம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட... மேலும் பார்க்க

திருப்பூர்: தனியார் பேருந்து கவிழ்ந்து 2 மாணவர்கள் பலி! 20 பேர் படுகாயம்!

திருப்பூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இரண்டு கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்... மேலும் பார்க்க

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினக் கூட்டாய்வு!

திருப்பூா் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினக் கூட்டாய்வு புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

பல்லடம் அரசுப் பெண்கள் பள்ளியில் விழிப்புணா்வு முகாம்

பல்லடம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தீண்டாமை தொடா்பான விழிப்புணா்வு முகாம் ப... மேலும் பார்க்க