செய்திகள் :

டிச. 15-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

post image

வரும் டிச. 15 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய பாலச்சந்திரன், “அந்தமான் கடல்பகுதியில் டிசம்பர் 15 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்து படிப்படியாக மழை குறையும்: பாலச்சந்திரன்

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுக்குறைந்து தென்தமிழகப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும்.

இதனால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்யக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதால், தமிழகத்தில் அடுத்த வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரோஜா - 2 தொடர் அறிவிப்பு!

ரோஜா தொடரின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.சன் தொலைக்காட்சியில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த 'ரோஜா' தொடர், கடந்த 2022 டிசம்பரில் நிறைவு பெற்றது. ரோஜா தொடரில... மேலும் பார்க்க

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.பகத் பாசில் பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான மலையாள மொழிப் படமான பொகெயின்வில்லா திரைப்படம் நாளை(டிச. 13) ச... மேலும் பார்க்க

வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை பலி!

புதுக்கோட்டையில் வீட்டிலேயே உறவினர்களால் பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை பலியானது.புதுக்கோட்டை: அரந்தாங்கியில் வீட்டிலேயே பிரசவம் பார்த்து பிறந்த குழந்தை, பிறந்த சில மணிநேரங்களிலேயே பலியானது. அரந்தாங்... மேலும் பார்க்க

குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!

குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மேலும் பார்க்க

கடைசி மழைமேகங்கள்... சென்னைக்கு இன்றிரவோடு மழைக்கு ரெஸ்ட்!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வால், சென்னையை நோக்கி வரும் மழை மேகங்களால் பெய்யும் கடைசி சுற்று தற்போது பெய்யும் மழையாக இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மென் தெரிவித்துள்ளார்.வானிலை நிலவரங்களை அவ்வபோது வெளியிடு... மேலும் பார்க்க

கொண்டாட்டத்தின்போது விபரீதம்! துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுமி பலி!

ஹரியாணாவில் திருமணக் கொண்டாட்டத்தின்போது சுடப்பட்ட துப்பாக்கியின் குண்டு பாய்ந்து 13 வயது சிறுமி பலியானார்.சண்டிகர்: திருமணக் கொண்டாட்டத்தின்போது சுடப்பட்ட துப்பாக்கியின் குண்டுப் பாய்ந்ததில் 13வயது ச... மேலும் பார்க்க