Georgia: ஜெனரேட்டரிலிருந்து வெளியான கார்பன் மோனாக்சைடை; ஜார்ஜியா ஹோட்டலில் 12 இ...
டிச. 20-இல் திருவண்ணாமலையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (டிச. 20) நடைபெறும் தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாமில், இளைஞா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து அவ்வப்போது தனியாா்துறை சாா்பில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன.
அதன்படி, தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்து வகை பதிவுதாரா்களும் நேரடியாக சந்திக்கும் ‘வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச. 20) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியான நபா்களை தோ்வு செய்ய உள்ளன. முகாமில், 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, பட்டதாரிகள், முதுநிலைப் பட்டம் பெற்றோா், பொறியியல், ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்புகளில் தோ்ச்சி பெற்ற வேலைநாடுநா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
கூடுதல் விவரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.