டிச. 27ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற டிச. 27 ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
விமானம் மூலமாக சென்னை வரும் அவர் பின் ஹெலிகாப்டர் மூலமாக திருவண்ணாமலை செல்கிறார்.
டிச. 28 ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகத்தைத் திறந்துவைக்கிறார். பின்னர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க | பவானிசாகர் அணையிலிருந்து நீர் திறக்க உத்தரவு!
அதன்பின்னர் திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.
பின்னர் அன்றைய தினமே திருவண்ணாமலையில் இருந்து நேரடியாக தில்லி செல்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.