செய்திகள் :

டிரேடிங்கில் CSK வருகிறாரா வாஷிங்டன் சுந்தர்? - அஸ்வின் பகிர்ந்த தகவல்!

post image

வருகின்ற ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது. மிகப் பெரிய தோல்வியில் இருந்து அணியை மீட்டெடுக்க நிர்வாகம் சில முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதாகத் தகவல்கள் வந்திருக்கின்றன.

அதில் குறிப்பாக, குஜராத் அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், சென்னை அணிக்கு டிரேடிங் மூலம் பெறப்படுவதாகக் கூறப்பட்டு வருகிறது.

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

கடந்த சீசனை கடைசி இடத்தில் முடித்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வலுப்படுத்த திறமையான வீரர்கள் வேண்டுமென ரசிகர்கள் குரலெழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ளார் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல்லில் டிரேடிங், மிட் சீசன் டிரான்ஸ்ஃபர் போன்றவையெல்லாம் அதிகமாக நடப்பது இல்லை என விளக்கமளித்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தர் - Ashwin

மேலும் இதுகுறித்து அஸ்வின் வாஷிங்டன் சுந்தரிடமே பேசியதாக கூரியுள்ளார். அஷ்வின் தெரிவித்ததன்படி, வாஷிங்டன் சுந்தர் அவரிடம் கூறியது: "குஜராத்துல போன வருஷம் நான் ஃபுல்லா எல்லா மேட்ச்சும் விளையாடல. ஆனா நான் ரொம்ப என்ஜாய் பண்ணினேன் அண்ணா. இங்க என்னோட கிரிக்கெட்டிங்குமே, கிரிக்கெட்டிங் ஆஸ்பெக்ட்டமே நல்லா வளர்ந்திருக்கு.

பேட்டிங்கும் சரி, பௌலிங்கும் சரி எனக்கு நிறைய ஒர்க் பண்றதுக்கு வால்யூம் கிடைச்சச்சு. பிராக்டீஸ் எல்லாம் அவுட்ஸ்டாண்டிங்கா இருக்கு. ரொம்ப என்ஜாய் பண்ணேன் நான் லாஸ்ட் இயர். அதனால நான் பர்சனலா டீமோட ரொம்ப ஹாப்பி அண்ணா. எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும்னு நினைக்கிறேன்.

டிரேடிங் பற்றி நான் எந்த விதமான தொடர்பும் செய்யல. அணி நிர்வாகம் தரப்பில் கம்யூனிகேஷன் பண்ணி இருந்தாங்கன்னா எனக்கு அதை பத்தி தெரியல. நான் வாழ்க்கையில் இப்ப இருக்குற இடத்தில் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்".

அப்பாவின் கனவை நிறைவேற்றப் பிறந்த தேவதை; பிரதிகா எனும் போராட்டக்காரி சாதித்த கதை

ஒரு இந்தியப் பெண் கிரிக்கெட்டைத் தன் கனவாகத் தேர்ந்தெடுக்கும்போது, அவள் எதிர்கொள்வது வெறும் பந்துகளை மட்டுமல்ல சமூகத்தின் பார்வைகள், குடும்பத்தின் எதிர்பார்ப்புகள், பொருளாதாரச் சுமைகள், மற்றும் தன்னம்... மேலும் பார்க்க

சாதம் ரூ.318; சீஸ்கேக் ரூ.748 - விராட் கோலி உணவகத்தின் விலைப் பட்டியல்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, கிரிக்கெட் மட்டுமின்றி பிசினஸிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் ‘One8 Commune’ என்ற உணவகத்தையும் நடத்தி வருகிறார். இந்த உணவகத்தை கோ... மேலும் பார்க்க

`கிரிக்கெட்ல இந்த சம்பவம் நடந்து 20 வருஷம் ஆச்சு’ குறைந்த இன்னிங்ஸில் நம்பர் 1 இடத்தை பிடித்த இளைஞன்

பிசிசிஐ-யின் சமீபகால செயல்பாடுகள் காரணமாக 2027 உலகக் கோப்பையில் ரோஹித், கோலி ஆகிய இருவரும் இந்திய அணியில் இடம்பெறுவார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் தொடர்ச்சியாக எழுப்பிய வண்ணம் வருகின்றனர்.தேர்வுக்கு கு... மேலும் பார்க்க

Shreyas Iyer: ``நான் குணமாகி வருகிறேன்'' - உடல்நிலை குறித்து ஸ்ரேயஸ் ஐயர்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின் போது இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயருக்கு, அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தக்... மேலும் பார்க்க

"ஆஸி பவுலர்களின் பாணி தெரியும்; இதைச் செய்தால் வெற்றி நிச்சயம்" - அரையிறுதிக்கு முன் ஷபாலி உறுதி

நடப்பு மகளிர் உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது.இன்று இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலி... மேலும் பார்க்க

ICC Women's World Cup: 169 ரன்கள் குவித்த லாரா வோல்வார்ட்; இறுதிப்போட்டிக்குள் தென்னாப்பிரிக்கா!

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய ஐசிசி மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி குவாஹாத்தியில் உள்ள பார்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்... மேலும் பார்க்க