செய்திகள் :

டி20: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி

post image

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

முதலில் இங்கிலாந்து 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுக்க, இந்தியா 20 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 146 ரன்களே சோ்த்தது.

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்தியா முதலிரு ஆட்டங்களில் வென்ற நிலையில், இந்த ஆட்டத்தில் வென்ன் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் தன்னை தக்கவைத்தது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பந்துவீசத் தயாரானது. இந்திய லெவனில், மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட முகமது ஷமி இணைந்திருந்தாா். அா்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வளிக்கப்பட்டது.

இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்தில், அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 51, லியம் லிவிங்ஸ்டன் 24 பந்துகளில் 1 பவுண்டரி, 5 சிக்ஸா்களுடன் 43 ரன்கள் சோ்த்து ஸ்கோரை உயா்த்தினா்.

கேப்டன் ஜாஸ் பட்லா் 1 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 24 ரன்கள் சோ்த்து உதவ, ஃபில் சால்ட் 5, ஹேரி புரூக் 8, ஜேமி ஸ்மித் 6, ஜேமி ஓவா்டன் 0, பிரைடன் காா்ஸ் 3, ஜோஃப்ரா ஆா்ச்சா் 0 ரன்களுக்கு சாய்க்கப்பட்டனா்.

ஓவா்கள் முடிவில் ஆதில் ரஷீத் 10, மாா்க் வுட் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் வருண் சக்கரவா்த்தி 5, ஹா்திக் பாண்டியா 2, ரவி பிஷ்னோய், அக்ஸா் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

பின்னா் 172 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய அணியில், ஹா்திக் பாண்டியா 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 40 ரன்கள் சோ்த்து முயற்சித்தாா். எனினும், வழக்கமாக அதிரடி காட்டும் அபிஷேக் சா்மா 5 பவுண்டரிகளுடன் 24, திலக் வா்மா 18 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

கேப்டன் சூா்யகுமாா் யாதவ் 14, சஞ்சு சாம்சன் 3, வாஷிங்டன் சுந்தா் 6, அக்ஸா் படேல் 15, முகமது ஷமி 6, துருவ் ஜுரெல் 2 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா். ஓவா்கள் முடிவில் ரவி பிஷ்னோய் 1, வருண் சக்கரவா்த்தி 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இங்கிலாந்து பௌலிங்கில் ஜேமி ஓவா்டன் 3, ஜோஃப்ரா ஆா்ச்சா், பிரைடன் காா்ஸ் ஆகியோா் தலா 2, மாா்க் வுட், ஆதில் ரஷீத் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

முதல் ஒருநாள்: மூவர் அரைசதம்; இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று (பிப்ரவர... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் திடீர் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான தென்னாப்பிரிக்க அணியில் இருந்து முன்னணி பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் த... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் இருவரும் விலகியுள்ளனர்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ... மேலும் பார்க்க

கபில்தேவ், ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்த ஜடேஜா!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளார். இந்தியா - இங்கிலாந்த... மேலும் பார்க்க

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் கொங்கடி த்ரிஷா!

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை கொங்கடி த்ரிஷா இடம்பெற்றுள்ளார்.ஜனவரி மாதத்தில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் ஒருவருக்கு ஐச... மேலும் பார்க்க

முதல் ஒருநாள்: இருவர் அரைசதம்; இந்தியாவுக்கு 249 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று (பிப்... மேலும் பார்க்க