என்டிபிசி நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
'ட்ரம்ப் கருத்தைப் பாராட்டுகிறேன், உடன்படுகிறேன்' - மோடி பதிவு; இந்தியா-அமெரிக்கா மீண்டும் நட்பா?
இந்தியா - ரஷ்யா வணிகத்தால், இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு இருந்த கோபமும், அதிருப்தியும் தணிந்து வருகிறது போலும்.
நேற்று...
ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'சீனாவிடம் இந்தியாவையும், ரஷ்யாவையும் தொலைத்துவிட்டது போல இருக்கிறது' என்று பதிவிட்டிருந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில், ட்ரம்ப், "நான் எப்போதும் பிரதமர் மோடி உடன் நட்பாக இருப்பேன். அவர் ஒரு சிறந்த பிரதமர்.
நான் எப்போதுமே அவருக்கு நண்பர் தான். ஆனால், இப்போது என்ன நடக்கிறதோ, அது தான் எனக்கு பிடிக்கவில்லை.
எப்போதுமே இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே மிக சிறப்பான உறவு இருக்கும். அது குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவ்வப்போது இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கும். அவ்வளவு தான்" என்று கூறியிருந்தார்.
மோடி பதிவு
அவருக்கு பதிலளிக்கும் விதமாக, இன்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், "அதிபர் ட்ரம்பின் கருத்துக்களையும், பாசிட்டிவான மதிப்பீட்டையும் நான் ஆழமாக பாராட்டுகிறேன் மற்றும் முழுமையாக உடன்படுகிறேன்.
இந்தியாவும், அமெரிக்காவும் மிகவும் பாசிட்டிவான மற்றும் முன்னோக்குச் சிந்தனையுடன் கூடிய ஒரு விரிவான மற்றும் உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையைக் கொண்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளார்.
ஆக, இந்தியா - அமெரிக்கா உறவு மீண்டும் நல்ல நிலைக்கு திரும்பி உள்ளது என்பதை நம்புவோம்.
Deeply appreciate and fully reciprocate President Trump's sentiments and positive assessment of our ties.
— Narendra Modi (@narendramodi) September 6, 2025
India and the US have a very positive and forward-looking Comprehensive and Global Strategic Partnership.@realDonaldTrump@POTUShttps://t.co/4hLo9wBpeF