செய்திகள் :

தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சியை ராமேஸ்வரம் நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு... மக்கள் சொல்வதென்ன?

post image

ராமேஸ்வரம் தீவு பகுதியில் தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் கிராமங்கள் தனித் தனி ஊராட்சிகளாகவும், ராமேஸ்வரம் பகுதி தனி நகராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது. தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊராட்சிகளில் பெரும்பான்மையாக மீனவர்கள் வசித்து வருகிறார்கள். மீன்பிடித் தொழிலும், மல்லிகைப்பூ விவசாயம் இங்கு முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு எந்த நவீன தொழிற்சாலைகளும் இல்லை.  இந்த இரண்டு ஊராட்சிகளின் கீழ் 20 -க்கும் மேற்பட்ட சிறிய மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு வாழும் மக்கள் குறைந்த வருவாயில் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். பெரும்பான்மையாக இங்கு குடிசை வீடுகளாகவே இருந்து வருகிறது.

ராமேஸ்வரம் நகராட்சி

இந்த நிலையில் தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊராட்சியை ராமேஸ்வரம் நகராட்சியோடு இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இது தொடர்பாக, தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊராட்சியை ராமேஸ்வரம் நகராட்சியோடு இணைக்க கோரி தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் ராமேஸ்வரம் நகராட்சியோடு தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊராட்சி இணைப்பதற்கான கருத்துரு மாவட்ட ஆட்சியர் வசம் உள்ளது.

இதுகுறித்து, "ஊராட்சியாக இருக்கும் பட்சத்தில் மத்திய மாநில அரசின் நலத்திட்டங்கள் அதிக அளவில் நேரடியாக மக்களை சென்றடைய வாய்ப்புள்ளது. மத்திய அரசின் சிறப்பு நிதிகள் ஊராட்சிக்கு கிடைக்கும். குறைந்த வரி ஊராட்சியில் விதிக்கப்படும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான மக்கள் பலனடைந்து வருகிறார்கள். பல்வேறு அரசுத் திட்டங்கள் ஊராட்சி மக்களுக்கு கிடைக்கும். ஆனால் நகராட்சியில் கிடைக்க வாய்ப்பில்லை.

முற்றுகை போராட்டத்தில் மக்கள்

மக்களுக்குப் பணியாற்றும் நபர்களை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் வசதி ஊராட்சியில் உள்ளது. இவற்றுடன் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் ஊராட்சிகளை சேர்த்தால் அதிகமான வரிகள் விதிக்கப்படும், ஊராட்சியில் கிடைக்கும் மத்திய மாநில சிறப்புத் திட்டங்கள் கிடைக்காமல் போகும் நிலை உள்ளது. எனவே தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊராட்சிகளை ராமேஸ்வரம் நகராட்சியுடன் இணைக்க கூடாது" என வலியுறுத்தி இரண்டு கிராம மக்களும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு மனு அளித்தனர்.

இதில் பாம்பன் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பேட்ரிக் மற்றும் தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் தேசிய செயலாளர் சேனாதிபதி சின்னத்தம்பி உள்பட  நுற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

டெல்லி சலோ: தொடரும் விவசாயிகள் போராட்டம்; நிலவும் பதற்றமான சூழல்!

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு செல்வோம்’ (டெல்லி சலோ) என்ற போராட்டத்தை பஞ்சாப் - ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு என... மேலும் பார்க்க

திண்டுக்கல்: அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள், பெற்றோர் போராட்டம்; `ஆசிரியர் இல்லையா?'- நடந்ததென்ன?

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளி கிராமத்தில் ஒரே வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலை பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு ... மேலும் பார்க்க