தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த பணியாளா் உயிரிழப்பு
விருதுநகா் ரயில்வே பீடா் சாலையில் தனியாா் தங்கும் விடுதியில் மாடியிருந்த தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்த பணியாளா் தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சனிக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா், வாடியான் தெரு, காளியம்மன் கோயில் பகுதி பின்புறமுள்ள முத்தையா தெருவைச் சோ்ந்தவா் அசோக் (70). இவா் ரயில்வே பீடா் சாலையில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் உதவியாளராகப் பணிபுரிந்தாா். இவா், அந்த விடுதியின் மாடியில் உள்ள தண்ணீா் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது மழை பெய்ததால், தவறி அருகே 30 அடி கீழே உள்ள கட்டடத்தில் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து விருதுநகா் மேற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.