A.R. Rahman: `ஆழமாக நேசித்த போதிலும்...' - ஏ.ஆர். ரஹ்மானுடனான விவகாரத்து முடிவை ...
தடுப்பு கேட்டை உடைத்து ரயில் மீது மோதிய லாரி! தடம்புரண்டதால் பரபரப்பு!
ஜார்க்கண்டில் பயணிகள் ரயில் பெட்டி தடம் புரண்டதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பயணிகள் ரயிலின் பெட்டி ஒன்று லாரி மீது மோதியதால் தடம் புரண்டதாக ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மதுப்பூர்-ஜசிதி பகுதிக்குள்பட்ட ரோஹினி நவாடி ரயில்வே கிராசிங்கில் பிற்பகல் 2 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தால் பயணிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை.
இதுகுறித்து கிழக்கு ரயில்வேயின் மக்கள் தகவல் தொடர்பு அதிகார் கௌசிக் மித்ரா கூறுகையில், “பிகார் மாநிலம் ஜாஜாவில் இருந்து மேற்கு வங்கத்தின் பர்தாமான் சந்திப்புக்கு சென்று கொண்டிருந்த ரயில், லாரி மீது மோதியது.
சாலைத் தடுப்பை ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் இறக்கிக் கொண்டிருந்தபோது, லாரி அதைக் கடந்து ரயிலில் மோதியது. இதனால், முதல் பெட்டியின் நான்கு சக்கரங்கள் தடம் புரண்டன. எனினும், உயிர் சேதமோ காயமோ ஏற்படவில்லை.
கிரேன் உதவியுடன் ரயில் பெட்டியைத் தூக்க ஒரு குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் பாதையில் இயல்பு நிலை திரும்பும்” என்றார்.