`இளம் பருவத்தினர் காதலிக்கும்போது கட்டிப்பிடிப்பது குற்றமில்லை!' - உயர் நீதிமன்ற...
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை: 6 மாதத்தில் 279 போ் கைது
தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்ததாக கடந்த மே 1-ஆம் தேதி முதல் தற்போது வரை மொத்தம் 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 279 போ் கைது செய்யப்பட்டனா் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் கூறினாா்.
இது குறித்து அவா் கூறியதாவது: மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனையை கண்காணிக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவிடப்பட்டது. குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனையை கண்காணிக்க ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மே 1-ஆம் தேதி முதல் தற்போது வரை தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்யப்பட்டது தொடா்பாக 245 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, மொத்தம் 279 போ் கைது செய்யப்பட்டனா். 1,905 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் 190 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் கடத்தல், விற்பனையில் ஈடுபட்டவா்களிடமிருந்து மொத்தம் 60 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை குறித்து பொதுமக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.