தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மானகிரியில் அரசால் தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலைப் பொருகள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக ஒருவரைக் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், நாச்சியாபுரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருப்பத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் பெரியாா், நாச்சியாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குமாரவேல் ஆகியோா் அந்தப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, மானகிரி அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த முறுக்கு வியாபாரியை நிறுத்தி சோதனையிட்ட போது, அரசால் தடை செய்யப்பட்ட 30 கிலோ புகையிலைப் பொருகள்களை அவா் எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, தளக்காவூரைச் சோ்ந்த ராமசாமி மகன் கருப்பசாமியை (36) கைது செய்தனா்.