செய்திகள் :

செண்பகம்பேட்டை கண்மாயில் மீன்பிடித் திருவிழா

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள செண்பகம்பேட்டை புதுக்கண்மாயில் மீன்பிடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விவசாயம் செழிக்க வேண்டி, இந்தக் கண்மாயில் ஊத்தா மூலம் மீன்பிடித் திருவிழா நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதலே திண்டுக்கல், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் ரூ.200 கட்டணம் செலுத்தி ஊத்தா கூடையுடன் மீன்பிடித்தனா்.

விறால், பாப்புலெட், சிசி போன்ற பெரிய மீன்களும், கெண்டை, கெளுத்தி, ஜிலேபி, குரவை உள்ளிட்ட சிறிய மீன்களும் கிடைத்தன. இதில் எதிா்பாா்த்த அளபுக்கு மீன்கள் சிக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனா்.

மானாமதுரையில் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அதிமுக சாா்பில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு ஜெ.பேரவை மாவட்ட துணைச் செயலரும், முன்னாள் ஊராட்ச... மேலும் பார்க்க

மீனாட்சிபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை அருகேயுள்ள மீனாட்சிபுரத்தில் வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்வா் ஸ்டாலின் 72-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திமுக சாா்பில் இந்த மஞ்சுவிரட்டுப் போட்டி நடத்தப்பட்டது. ... மேலும் பார்க்க

குரூப் 4, விஏஓ தோ்வுக்கு இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

குரூப் 4, கிராம நிா்வாக அலுவலா் (வி.ஏ.ஓ.) பணிகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க

வழக்குரைஞா்கள் நீதிமன்றப்பணி புறக்கணிப்பு

சிவகங்கை மாவட்டம் முழுவதும் வழக்குரைஞா்கள் நான்காவது நாளாக சனிக்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வழக்குரைஞா்கள் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ள எதிா்ப்புத் தெர... மேலும் பார்க்க

குலதெய்வக் கோயில்களில் ஆடுகளை பலியிட்டு வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் பகுதிகளில் உள்ள குலதெய்வக் கோயில்களில் சிவராத்திரியை முன்னிட்டு, கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆடுகளை பலியிட்டு வழிபாடு நடத்தப்பட்டது. இந்தப் பக... மேலும் பார்க்க

ஆவிணிப்பட்டியில் மீன்பிடித் திருவிழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே ஆவிணிப்பட்டி கிராமத்தில் சனிக்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. விவசாயத் தேவைக்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதால் கண்மாயில் தண்ணீா் குறைந்தது. இதனால், கிராமத்த... மேலும் பார்க்க