தலித் இளைஞர் அடித்தே கொலை! கிணற்று நீரை பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறு..
தண்ணீர்: 8 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்; இது மத்தியப் பிரதேச அதிர்ச்சி!
மத்தியப்பிரதேச மாநிலம் ஷிவ்புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாரத் ஜாதவ் (27). பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இவர் தன் அத்தை வீடு இருக்கும் இந்தர்கர் கிராமத்துக்குச் சென்றிருக்கிறார். நேற்று ஆழ்துளை கிணற்றிருலிருந்து தண்ணீர் எடுப்பதற்காக சென்றிருக்கிறார் நாரத் ஜாதவ். அப்போது அங்கு வந்த பதம் சிங் தாகர், அவர் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து நாரத் ஜாதவ்-வை கட்டைகளால் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். இதில் நிலைகுலைந்து விழுந்த நாரத் ஜாதவை மேலும் தாக்கியிருக்கிறார்கள். இதில் நாரத் ஜாதவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது தொடர்பாக பதம் சிங் தாகர் உள்ளிட்ட் 8 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும், நாரத் ஜாதவ் தாக்கப்படும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
அது தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. போலீசார் உறுதி செய்துள்ளனர். தற்போது விசாரணை நடந்து வருகிறது. இது தொடர்பாக மத்தியப்பிரதேச காங்கிரஸ் தன் எக்ஸ் பக்கத்தில், ``சாதி அடிப்படையிலான பாகுபாடுக்கு எதிராகவும், வன்முறைக்கு எதிராகவும் தீர்வு காண மாநில அரசு தவறிவிட்டது. சிவ்புரியில், நாரத் ஜாதவ் என்ற பிற்படுத்தப்பட்ட இளைஞன் மற்றொரு பிரிவினரால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். பட்டப்பகலில் இக்கொடூரச் செயல் நடந்திருக்கிறது. மாநில உள்துறை அமைச்சர் சுற்றுலாவில் பிஸியாக இருக்கும்போதும், குற்றவாளிகளுக்கு சட்டத்தின் மீது அச்சம் இல்லாதபோதும், சட்டமீறல் நிலவும் போதும், இதுபோன்ற சம்பவங்கள் சர்வசாதாரணமாகி விடுகின்றன." எனக் குறிப்பிட்டிருக்கிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...